விழுப்புரம் மாவட்டம் நன்னாடு அருகே ஆலத்தூர் கிராமத்தில், விவசாய வேலையில் ஈடுபடும் பெண்கள் வேலை களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடிக்கொண்டே வேலை செய்தது காண்போரை மகிழ்சியில் திளைக்க வைத்தது. நமது நாட்டில் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. விவசாயத்தில் தமிழகத்தை பொறுத்தவரை இயந்திரங்கள் இல்லாமல் மனிதர்களே பெரும்பாலான வேலைகளை செய்து வருகின்றனர். வேலை நேரத்தில் வேலை களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்கள் உதவுகின்றன.
அந்தவகையில் இந்த நாட்டுப்புற பாடல்கள் உழவர்களின் மனச்சோர்வை அகற்றுவதாகவும், உடல் உழைப்பினால் ஏற்படக்கூடிய வலியையும் போக்குவதாகவும் அமைந்துள்ளது. உழவுத்தொழிலில் நடவு, களை எடுத்தல் போன்ற வேலைகளில் விவசாயிகள் ஈடுபடும்போது இந்த நாட்டுப்புற பாடல்களை அவர்கள் பாடுவது வழக்கம்.
அந்த வகையில் விழுப்புரம் நன்னாடு அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் விவசாயிகள் மஞ்சளை அறுவடையில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் இனிமையான பழைய எம்.ஜி.ஆர் பாடல்கள்களை பாடிக்கொண்டே வேலை செய்தனர். இதுபோன்ற செயல்கள் தற்போது பார்ப்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. முந்தைய காலத்தில் அனைவருமே களைப்பு தெரியாமல் இருப்பதற்கு பாட்டு பாடிக்கொண்டே வேலை செய்வார்கள். ஆனால் தற்போது ஒரு சில கிராமங்களில் உள்ள மக்கள் மட்டுமே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில்.. விழுப்புரத்தில் எளியமுறையில் செய்முறை பயிற்சி!
தென்பேர் கிராமசபை கூட்ட தீர்மானத்தை ஏற்று டாஸ்மாக் கடையை இடமாற்றுவதாக உறுதியளித்த விழுப்புரம் ஆட்சியர்..
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? - விழுப்புரம் கலெக்டர் விளக்கம்
ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!
இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு
விழுப்புரத்தில் 100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தக திருவிழா!
விழுப்புரத்தில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
சிறுவர்களுக்கு பிடித்த பாட்ஷா பாய் பெட் ஷாப்.. எங்கு இருக்கு தெரியுமா?
மரக்காணம் அருகே ரூ.25 கோடியில் பறவைகள் சரணாலயம்.. மகிழ்ச்சியில் விழுப்புரம் மக்கள்!
கோடை வெயிலால் எலுமிச்சை விலை அதிகரிப்பு.. விழுப்புரம் விவசாயிகள் மகிழ்ச்சி!
ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் - பொதுமக்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் விழிப்புணர்வு..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Agriculture, Local News, Villupuram