விழுப்புரம் மாவட்டம் மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1976-77ம் ஆண்டு 10-ம் வகுப்பு முடித்த முன்னாள் மாணவர் சந்திப்பு மாம்பழப்பட்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு மின்விசிறிகள், நாற்காலிகள், மற்றும் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள், உள்ளிட்ட 50,000ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கு செய்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காணை ஊராட்சி ஒன்றிய தலைவர் கலைச்செல்வி பேசியபோது,“இந்த பள்ளியில் தமிழில் படித்த மாணவர்கள் இப்போது பல்வேறு அரசு துறையில் பணியாற்றி வருகின்றனர்.
அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் நம்முடைய முதலமைச்சரும் தமிழின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. எனவே தாய்மொழியாகிய தமிழில் பாடங்கள் கற்பதை நாம் பெருமையாக கொள்வோம்.” என்றார். மேலும், இந்த சந்திப்பு குறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், ”அனைவரையும் இங்கு சந்தித்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். மீண்டும் அனைவரும் சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்களுடைய பழமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்.” என்று தெரிவித்தனர். அதன்பின் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!
விழுப்புரத்தில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
கோடை வெயிலால் எலுமிச்சை விலை அதிகரிப்பு.. விழுப்புரம் விவசாயிகள் மகிழ்ச்சி!
சிறுவர்களுக்கு பிடித்த பாட்ஷா பாய் பெட் ஷாப்.. எங்கு இருக்கு தெரியுமா?
மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில்.. விழுப்புரத்தில் எளியமுறையில் செய்முறை பயிற்சி!
இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? - விழுப்புரம் கலெக்டர் விளக்கம்
விழுப்புரத்தில் 100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தக திருவிழா!
ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் - பொதுமக்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் விழிப்புணர்வு..
மரக்காணம் அருகே ரூ.25 கோடியில் பறவைகள் சரணாலயம்.. மகிழ்ச்சியில் விழுப்புரம் மக்கள்!
தென்பேர் கிராமசபை கூட்ட தீர்மானத்தை ஏற்று டாஸ்மாக் கடையை இடமாற்றுவதாக உறுதியளித்த விழுப்புரம் ஆட்சியர்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Local News, Villupuram