PREVNEXT
ஹோம் / நியூஸ் / விழுப்புரம் /

இந்தியாவின் அடுத்த தங்கமங்கை விழுப்புரம் மாணவி சுபஸ்ரீ

இந்தியாவின் அடுத்த தங்கமங்கை விழுப்புரம் மாணவி சுபஸ்ரீ

Vilupuram District News : மாநில போட்டிகளில் வென்று தேசிய அளவில் நடைபெறும் ஓட்டப் பந்தத்திற்கு தேர்வான காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவி சுபஸ்ரீ பற்றிய செய்தித்தொகுப்பு.

விழுப்புரம் மாவட்டம், கிழக்கு பாண்டி சாலையில் அமைந்துள்ள அரசு நிதியுதவி பெறும் M.R.I.C.R.(எம் ஆர் ஐ சி ஆர் )உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார் சுபஸ்ரீ என்ற மாணவி.

இவர் சென்னையில் நடைபெற்ற செவித்திறன் குறைபாடு உள்ள மாணவ. மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் மாநில அளவில் நடைபெற்ற 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார்.

அதுமட்டுமல்ல நீளம் தாண்டுதல் போட்டியிலும் முதலிடம் பிடித்து விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மாணவி சுபஸ்ரீயை மாவட்ட ஆட்சியர் மோகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு - விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

விதை விற்பனை - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

பிறந்து 50 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் வீசி கொலை.. இளம்பெண் விபரீத முடிவு - வரதட்சணை கொடுமையா? போலீஸ் விசாரணை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு

ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. விழுப்புரத்தில் சோகம்!

“உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு

விழுப்புரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்

விழுப்புரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா

தென்பெண்ணை ஆற்று திருவிழாவை கொண்டாட விழுப்புரத்தில் குவிந்த 3 மாவட்ட மக்கள்

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்தால்போதும்.. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் சொன்ன தகவல்..

சுபஸ்ரீ தனக்குள் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் கல்வியிலும் சரி விளையாட்டும் சரி சிறந்து விளங்க வேண்டும் எனவும், மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் சிறுவயதிலேயே விதைத்துக்கொண்டவர்.

இதையும் படிங்க : விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

தனக்கு பல குறைபாடுகள் இருந்தாலும் இலக்கின் இலக்கை நோக்கி ஓடும்போது குறைகள் ஏதும் கண்ணுக்கு தெரியாமல் நிமிர்ந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்ததாக சுபஸ்ரீ தெரிவித்தார்.

சுபஸ்ரீ பற்றி அவர்கள் பெற்றோர் தெரிவிக்கையில் “என் பெயர் ராஜரத்தினம், தாயார் பூங்கொடி. சுபஸ்ரீ தான் மூத்த பிள்ளை, தேஜாஸ்ரீ (5) இரண்டாவது பிள்ளை. சுபஸ்ரீ பிறக்கும் போது செவி திறன் கேட்காமலும் மற்றும் வாய் பேச முடியாத குறைவுடன் பிறந்தார்.

ஆனா எங்களுக்கு அது ஒரு பெரிய குறைபாடாக தெரியவில்லை. என் பிள்ளை வளர வளர ஓட்டப்பந்தயத்தில் ஆர்வமாக இருப்பதை கண்டறிந்து அதனை ஊக்குவித்தேன் தற்போது அவர் மாநில அளவில் வெற்றி கண்டு தேசிய அளவில் நடைபெறும் ஓட்டப் பந்தத்திற்கு தேர்வாகியுள்ளார்.

இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது நிச்சயமாக என் பிள்ளையை பெரிய ஆளாக கொண்டு வருவேன்” என தெரிவித்தார்.

மேலும் சுபஸ்ரீ பயிற்சி அளிக்கும் உடற்கல்வி ஆசிரியரான சோபியா அல்போன்ஸ் அவரை பற்றி கூறுகையில் “சுபஸ்ரீக்கு எளிதில் புரியும் வகையில் முழுக்க முழுக்க செய்கையிலும், எழுத்து வடிவிலும் பயிற்சி அளித்து வருகின்றனர்.

377

மேலும் படிக்க : சுற்றுலா பயணிகள் என்ஜாய் பண்ண ஏற்ற இடம் - கன்னியாகுமரி குற்றியார் இரட்டை அருவி!

மற்ற மாணவர்களை காட்டிலும் சுபஸ்ரீக்கு அதிக பயிற்சியும் அதிக கவனமும் செலுத்தி போட்டிகளுக்கு தயார்படுத்தி வருகிறேன். சுபஸ்ரீ தமிழக அளவிலான தடகளப் போட்டியில் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமையை தேடித்தந்துள்ளார்” என்றார்.

இந்த செயல் பள்ளி மாணவர்களின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுபஸ்ரீ பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் சுபஸ்ரீ நீச்சல் போட்டியிலும் சிறந்து விளங்கி வருகிறார். மாவட்ட அளவில் மூன்று பிரிவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவரின் மத்தியில் நீச்சல் போட்டியில் பல பரிசுகளை பெரும் மாணவியாக சுபஸ்ரீ மட்டும் உள்ளார்.

மாணவிக்கு தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சுபஸ்ரீ மாணவிக்கு பயிற்சி பெறுவதற்கான நிதி உதவி அல்லது ஊக்கத்தொகை ஏதாவது தமிழக அரசாங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் வழங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும் என பெற்றோர் மற்றும் பள்ளி சார்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:Local News, Vizhupuram

சிறந்த கதைகள்