PREVNEXT
ஹோம் / நியூஸ் / விழுப்புரம் /

விழுப்புரத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு பதிவு மையங்கள்

விழுப்புரத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு பதிவு மையங்கள்

Villupuram District | மின் இணைப்பு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் என்று அறிவிப்க்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரத்தில் இதற்கான சிறப்பு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் இணைப்பு

மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் இணைப்பு

தமிழகம் முழுவதும் மின் இணைப்பு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்று முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் இன்று (திங்கள்) முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை, மின்கட்டண அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.  2,811 மின்வாரிய பிரிவு மையங்களிலும் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களது மின் பயனீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று, இணைத்துக் கொள்ளலாம். அரசு விடுமுறைகளை தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்தால்போதும்.. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் சொன்ன தகவல்..

தென்பெண்ணை ஆற்று திருவிழாவை கொண்டாட விழுப்புரத்தில் குவிந்த 3 மாவட்ட மக்கள்

கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு - விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

விழுப்புரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா

விதை விற்பனை - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு

“உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு

விழுப்புரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்

பிறந்து 50 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் வீசி கொலை.. இளம்பெண் விபரீத முடிவு - வரதட்சணை கொடுமையா? போலீஸ் விசாரணை

ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. விழுப்புரத்தில் சோகம்!

இந்நிலையில், விழுப்புரம் மின் வினியோக கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் இன்றும் (திங்கட் கிழமை), நாளையும் (செவ்வாய்க் கிழமை), நாளை மறுநாள்(புதன் கிழமை) ஆகிய 3 நாட்களில் நுகர்வோர் மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு ஆதார் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Must Read : நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்த ஊர் இதுதானா..! - எந்த மாவட்டத்தில் இருக்கிறது தெரியுமா?

மின் இணைப்பு உரிமையாளர்கள், குடியிருந்து வரும் வாடகைதாரர்கள், ஆதார் அட்டையுடன் அந்தந்த மின் கட்டணம் செலுத்தும் பிரிவு அலுவலகத்தில் காண்பித்து ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மேலும், நுகர்வோர்கள் ஆன்லைன் மூலம் www.tangedco.gov.in என்ற இணையதளம் வழியாகவும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக்கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த அரிய வாய்ப்பை நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

Tags:Aadhaar card, EB Bill, Local News, TNEB, Villupuram

சிறந்த கதைகள்