தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காலையில் அதிக உஷ்ணமும், இரவில் புழுக்கமும் தாங்க முடியாமல் மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர். வெயிலின் உஷ்ணத்தில் இருந்து காத்துக் கொள்ள அதிக அளவில் குளிர்பானங்கள் மற்றும் பழங்களைக் நாடி செல்கின்றனர். அதுபோல கோடை காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி குடிக்கும் கூல்டிரிங்ஸ் என்றால் அது லெமன் ஜூஸ் தான். கடைகளில் மட்டும் இல்லாமல் வீட்டிலேயே வெயில் காலத்தில் அதிக அளவில் எலுமிச்சை ஜூஸ் குடித்து வருகின்ற காரணத்தால் எலுமிச்சைக்கு சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளது.
இதனால் இதன் விலையும் அதிகரித்துள்ளது.
திமுகவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தம்பியின் பதவி பறிப்பு... இதுதான் காரணம்... பின்னணி தகவல்கள்..!
விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய வள்ளலார் பக்தர்கள்..
மாற்றுத்திறனாளிகளுக்கு எலக்ட்ரிக் பைக் வழங்கிய விழுப்புரம் ஆட்சியர்!
கள்ளச்சாராய வேட்டை எதிரொலி - விழுப்புரத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்தது..!
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி.. கொதிக்கும் குழம்பை மனைவி மீது ஊற்றிய கொடூர கணவர்!
விழுப்புரத்தில் விஷச் சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 22 பேர்...
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இதை பண்ணுங்க..! விழுப்புரம் சித்த மருத்துவரின் கோடைக்கால டிப்ஸ்..!
காதிகிராப்ட் மூலம் பனை பொருட்கள் விற்பனை.. விழுப்புரத்தில் கலெக்டர் தொடங்கி வைத்தார்..
விழுப்புரத்தில் ராஜராஜன் காலத்து சுரங்க அறை, கல்வெட்டு கண்டுபிடிப்பு..!
“எங்க அம்மாவுக்கு வேலை தாங்க..” விழுப்புரம் கலெக்டரிடம் மனு கொடுத்த சிறுமி!
விழுப்புரத்தில் பள்ளி வாகனங்கள் திடீர் ஆய்வு.. என்ன காரணம் தெரியுமா?
ஜனவரி மாதத்தில் 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை தற்போது ஒரு எலுமிச்சை 10 ரூபாயும், ஒரு கிலோ 100 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. ஒரு மூட்டையின் விலை ரூபாய் 3000 லிருந்து 4000 வரை விற்பனையாகிறது. சந்தைகளில் பொதுமக்கள் எலுமிச்சை பழங்களைத் தேடி தேடி வாங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் எலுமிச்சை பழத்திற்கு திடீரென மவுசு கூடியுள்ளது. இதனால் எலுமிச்சை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து எலுமிச்சை பழ வியாபாரி கூறுகையில்,
”நாங்கள் எம். ஜி ரோடு மார்க்கெட்டில் , எலுமிச்சை பழம் விற்பனை செய்து வருகிறோம். எனக்கு இன்னும் சில வியாபாரிகளுக்கு திருச்சியிலிருந்து எலுமிச்சை பழங்களை கொண்டு வந்து விழுப்புரத்தில் வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த மாதங்களை விட தற்போது எலுமிச்சம்பழம் வியாபாரம் நல்ல முறையில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
2 அல்லது 3 ரூபாய்க்கு விற்பனையான எலுமிச்சை பழம் தற்போது 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு மூட்டை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வாங்கிட்டு வருவோம் ஆனால் தற்போது மூட்டையின் விலை 3000 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் வரை விற்பனைக்கு போகிறது. பொதுமக்களும் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க, பழங்களை அதிக அளவில் வாங்குகின்றனர். அதில் முக்கியமாக எலுமிச்சை பழங்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் இதனால் எங்களுக்கு வியாபாரம் நல்ல முறையில் போகிறது” என மகிழ்ச்சியுடன் கூறினார் வியாபாரி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Local News, Villupuram