PREVNEXT
ஹோம் / நியூஸ் / விழுப்புரம் /

விழுப்புரம் மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை - நேர்முகத்தேர்வு குறித்த முக்கிய விவரம்

விழுப்புரம் மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை - நேர்முகத்தேர்வு குறித்த முக்கிய விவரம்

Villupuram District | விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக இருக்கும் 244 விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்த முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு

ரேஷன் கடையில் வேலை வாய்ப்பு

விழுப்புரம் நேர்முகத்தேர்வு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களின் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் 244 விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அந்த பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

விதை விற்பனை - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு

விழுப்புரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்

தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்தால்போதும்.. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் சொன்ன தகவல்..

பிறந்து 50 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் வீசி கொலை.. இளம்பெண் விபரீத முடிவு - வரதட்சணை கொடுமையா? போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

விழுப்புரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா

ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. விழுப்புரத்தில் சோகம்!

தென்பெண்ணை ஆற்று திருவிழாவை கொண்டாட விழுப்புரத்தில் குவிந்த 3 மாவட்ட மக்கள்

“உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு

கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு - விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

இந்த தேர்வானது வருகிற 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை விழுப்புரம் கப்பியாம்புலியூரில் உள்ள ஏ.ஆர்.பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்(அனுமதிச்சீட்டு) விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தின் வழியாக (www.drbvpm.in/hallticket.php) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Must Read : மூலிகை சூப், படகு சவாரி, இயற்கையின் பேரழகு... சுவைக்க.. ரசிக்க சிறந்த சுற்றுலா தலம்

இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் உதவிக்கான குழுவின் பிரத்யேக தொலைபேசி எண்ணான 04146- 229854 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது drpdsvpm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம் என விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் யசோதாதேவி தெரிவித்துள்ளார்.

Tags:Job Vacancy, Local News, Ration Shop, Villupuram

சிறந்த கதைகள்