PREVNEXT
முகப்பு / செய்தி / விழுப்புரம் / விழுப்புரத்தில் முத்தாம்பிகை கோயில் மகா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் ஆரம்பம் 

விழுப்புரத்தில் முத்தாம்பிகை கோயில் மகா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் ஆரம்பம் 

Villupuram | தை மாதம் 18ம் தேதி அதாவது ஆங்கில நாள்காட்டி படி பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் ஏழு நிலை ராஜகோபுரத்திற்கும் அம்மாள் ராஜகோபுரம் பரிவார விமானக் கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

விழுப்புரத்தில் முத்தாம்பிகை கோயில் மகா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் திருவாமத்தூர் கிராமத்தில் உள்ள மூத்தாம்பிகை அம்மன் ஆலயம் மற்றும் அபிராமேஸ்வர பெருமான் திருக்கோவில் ஆலய புதிய பஞ்சவர்ண ராஜகோபுரம், விமானம் மற்றும் பரிவாரங்கள் விநாயகர் முருகன் சுவாமி அம்பாள்  உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் அடுத்த 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவாமத்தூர் என்ற கிராமம்.  இயற்கை எழில் சூழ்ந்த இந்த கிராமத்தில் சிறப்பு வாய்ந்த மற்றும் பழமை வாய்ந்த சிவன், அம்பாள் என்று தனி கோயில் உள்ளது. இதுவே இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். தேவார பாடல் பெற்ற தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது.

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் - பொதுமக்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் விழிப்புணர்வு..

ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!

இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு

விழுப்புரத்தில் 100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தக திருவிழா!

கோடை வெயிலால் எலுமிச்சை விலை அதிகரிப்பு.. விழுப்புரம் விவசாயிகள் மகிழ்ச்சி!

சிறுவர்களுக்கு பிடித்த பாட்ஷா பாய் பெட் ஷாப்.. எங்கு இருக்கு தெரியுமா?

மரக்காணம் அருகே ரூ.25 கோடியில் பறவைகள் சரணாலயம்.. மகிழ்ச்சியில் விழுப்புரம் மக்கள்!

தென்பேர் கிராமசபை கூட்ட தீர்மானத்தை ஏற்று டாஸ்மாக் கடையை இடமாற்றுவதாக உறுதியளித்த விழுப்புரம் ஆட்சியர்..

விழுப்புரத்தில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? - விழுப்புரம் கலெக்டர் விளக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில்.. விழுப்புரத்தில் எளியமுறையில் செய்முறை பயிற்சி!

முன்னோர் காலத்தில் வன்னி மரக் காடாக இருந்த இவ்விடத்தில் சுவாமி சுயம்பு மூர்த்தி, பசுக்கள் மற்ற மிருகங்களால் அடிக்கடி தாக்கப்பட்டு வருவதால் அவற்றிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக அவை ஒன்றுகூடி இறைவனை நோக்கி தவம் இருந்து கொம்பு பெற்ற தலமாக இக்கோயில் உள்ளது.

பசுக்களுக்கு தாயூராகவும் வடமொழியில் கோமத்ருபுரம் என்றும்

திரு -ஆ -மாத்தூர் என்பது திருஆமாத்தூர் என வழங்கப்பட்டு தற்போது திருவாமத்தூர் என அழைக்கப்பட்டு வருகிறது.இறைவன் அபிராமேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு திருமேனி ஆக உள்ளார்.

பசுக்கள் வழிபட்டதன் தன் அடையாளமாக இறைவன் திருவடி மீது கால் குளம்பு பதித்த வடுவும் திருமேனியில் பால் சொரிந்த வடுவும் உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

377

ஸ்ரீராமர் இலங்கை செல்லும் போது இத்தலத்திற்கு வந்து அபிமானமாக வழிபட்டதால் இறைவனுக்கு அபி -ராம-ஈஸ்வரர் = அபிராமேஸ்வரர் என பெயர் வழங்கப்பட்டது. இதனை திருநாவுக்கரசர் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை பழமையான கோவிலுக்கு வருகிற தை மாதம் 18ம் தேதி அதாவது ஆங்கில நாள்காட்டி படி பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் ஏழு நிலை ராஜகோபுரத்திற்கும் அம்மாள் ராஜகோபுரம் பரிவார விமானக் கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக பணிகள் அனைத்தும் மும்முரமாக கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

முக்கிய செய்திகள்