PREVNEXT
ஹோம் / நியூஸ் / விழுப்புரம் /

ரேஷன் கார்டு வகை மாற்றம் செய்ய சிறப்பு முகாம் - விழுப்புரம் மக்களே தவறவிடாதீங்க!

ரேஷன் கார்டு வகை மாற்றம் செய்ய சிறப்பு முகாம் - விழுப்புரம் மக்களே தவறவிடாதீங்க!

Villupuram District | விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் அட்டைகளின் வகையை மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் நாளை மறுநாள்  (வெள்ளிக் கிழமை) மற்றும் டிசம்பர் 9 ஆகிய நாட்களில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளின் வகையை மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) மற்றும் வரும் 9ஆம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களில் முன்னுரிமையற்ற குடும்ப (என்.பி.எச்.எச்.) அட்டைதாரர்கள் தங்களை மீளவும் முன்னுரிமை குடும்ப (பி.எச்.எச்.) அட்டைதாரராகவும், அந்தியோதியா அன்னயோஜனா (ஏ.ஏ.ஒய்.) அட்டைதாரராகவும் மாற்றம் செய்யக்கோரி தொடர்ந்து மனுக்கள் கொடுத்து வருகின்றனர்.

நாளை மறுநாள்(வெள்ளிக் கிழமை) மற்றும் வரும் 9ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவர்களிடம் கோரிக்கை மனு அளிக்க சிறப்பு முகாம் நடக்க இருக்கிறது. இதில் குடும்ப அட்டை மற்றும் அந்தியோதியா அன்னயோஜனா அட்டைதாரராக மாற்றம் செய்யக்கோரும் மனுவை கிராம நிர்வாக அலுவலரிடம் அளிக்கலாம்.

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

பிறந்து 50 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் வீசி கொலை.. இளம்பெண் விபரீத முடிவு - வரதட்சணை கொடுமையா? போலீஸ் விசாரணை

கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு - விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

விதை விற்பனை - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

“உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு

விழுப்புரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்தால்போதும்.. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் சொன்ன தகவல்..

ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. விழுப்புரத்தில் சோகம்!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு

தென்பெண்ணை ஆற்று திருவிழாவை கொண்டாட விழுப்புரத்தில் குவிந்த 3 மாவட்ட மக்கள்

விழுப்புரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா

முகாமில் பெறப்படும் மனுக்களின்பேரில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் விசாரணை செய்யப்பட்டு தகுதியான நபர்களுக்கு குடும்ப அட்டை வகை மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இந்த நல்ல வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திகொண்டு குறைகளை தீர்வு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : ஒரு காலை தூக்கி உயர்ந்து நிற்கும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை வழிபடுவதால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா?

தமிழகத்தில், 5 வகையாக ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவை குடும்பத்தின் வருவாயைப் பொருத்து மாறுபடுகிறது.

ரேஷன் கார்டுகளின் வகைகள்:

 உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் ரேஷன் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும்.

ரேஷன் கார்டில் PHH*- AAY என்று குறிப்பிட்டு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் ரேஷன் கடையில் வாங்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

377

ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டிருந்தால் ரேஷன் கடையில் அரிசி உட்பட அனைத்து பொருட்களை வாங்க முடியும்.

ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் பெறலாம்.

ரேஷன் கார்டில் NPHH-NC என்ற குறியீடு இருந்தால் இதை ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

Tags:Local News, Ration card, Villupuram

சிறந்த கதைகள்