PREVNEXT
ஹோம் / நியூஸ் / விழுப்புரம் /

விழுப்புரத்தில் களைகட்டிய கலை திருவிழா..பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

விழுப்புரத்தில் களைகட்டிய கலை திருவிழா..பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

Vilupuram News: விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் அளவிலான கலைத்திருவிழா நவம்பர் 23-ம் தேதி முதல் மூன்று பிரிவுகளில் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற பள்ளிகள் அளவிலான கலைத்திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் மோகன் துவக்கி வைத்தார்.

பள்ளிகள் அளவிலான கலைத்திருவிழா

தமிழ்நாடு முதலமைச்சர் மாணாக்கர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப்பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில், பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டி நடத்திட உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் அளவில் 23.11.2022 தேதி முதல் மூன்று பிரிவுகளில் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்தால்போதும்.. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் சொன்ன தகவல்..

ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. விழுப்புரத்தில் சோகம்!

“உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு

தென்பெண்ணை ஆற்று திருவிழாவை கொண்டாட விழுப்புரத்தில் குவிந்த 3 மாவட்ட மக்கள்

பிறந்து 50 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் வீசி கொலை.. இளம்பெண் விபரீத முடிவு - வரதட்சணை கொடுமையா? போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

விதை விற்பனை - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

விழுப்புரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு

கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு - விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் “விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள்  அதிகளவில் கலைத் திருவிழா போட்டிகளில் பங்குபெற பெயர் பதிவு செய்து இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இக்கலைத் திருவிழாவானது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை காத்திடும் பொருட்டு நடத்தப்பட்டு வருகிறது.

கலைத்திருவிழாவின் மூலம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை காப்பது ஒருபுறம் இருந்தாலும், மாணவர்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொணருவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

Also Read: கார்த்திகை தீபம் ஸ்பெஷல்.. தண்ணீரில் எரியும் அதிசய விளக்கு.. அசத்தும் விழுப்புரம் பெண்கள்..

மாணவர்கள் ஒவ்வொருவரும் கல்வி படிப்பில் ஆர்வம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் இசைக்கருவிகள் வாசிப்பது, நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது போன்ற தனித்திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்”. என தெரிவித்தார்.

 

கலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவியர்களுக்கு புத்தகங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் மோகன் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் மாணவிகள் ஆர்வமாக நடனமாட ஆரம்பித்தனர் நாட்டுப்புறப்பாடல், வெஸ்டன் டான்ஸ், பரதநாட்டியம் போன்ற பல வகைகளில் நடனமாடி மாணவர்கள் உற்சாகப்படுத்தினர்.

Tags:Local News, School students, Tamil News, Villupuram

சிறந்த கதைகள்