PREVNEXT
ஹோம் / நியூஸ் / விழுப்புரம் /

பெண்களே எண் 181 எதுக்கு என்று தெரியுமா..? விழுப்புரத்தில் பேரணி மூலம் விழிப்புணர்வு..

பெண்களே எண் 181 எதுக்கு என்று தெரியுமா..? விழுப்புரத்தில் பேரணி மூலம் விழிப்புணர்வு..

Viluppuram District News : சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ , மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்  மோகன்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ , மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் சார்பில் , நவம்பர் 23.11.2022 முதல் 10.12.2022 வரை பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்கள் நகரத்திலிருந்து (விழுப்புரம்)

இளமைக்கால ஞாபகங்களை பகிர்ந்த 60-ஸ் கிட்ஸ்.. விழுப்புரம் மாம்பழப்பட்டு பள்ளியில் ரீயூனியன்..

விழுப்புரத்தில் முத்தாம்பிகை கோயில் மகா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் ஆரம்பம் 

“உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு

விமான நிலைய வாடிக்கையாளர் சேவை பயிற்சி - விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கோழிகளுக்கு பரவும் ராணிகட்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்..

விழுப்புரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்

அதிமுக கிளை செயலாளரை வீடுபுகுந்து கண்மூடித்தனமாக தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

இந்திய விமானப்படை குழு Y-ல் வேலைவாய்ப்பு.. இளைஞர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன விழுப்புரம் ஆட்சியர்..

பிரம்மதேசத்தில் கண்டறியப்பட்ட 12ம் நூற்றாண்டை சேர்ந்த மூத்ததேவி சிற்பம்..

கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு - விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சள் அறுவடை பணியின்போது மாஸ் காட்டிய நன்னாடு பெண்கள்..

இதையும் படிங்க : ஒரு காலை தூக்கி உயர்ந்து நிற்கும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை வழிபடுவதால் இத்தனை நன்மைகள் ஏற்படுமா?

இந்திய அரசானது 181 என்ற எண்ணை தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கியுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24*7 அவசர உதவியை அளிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது தான் இந்த மகளிர் அவசர உதவி எண்.

பெண்களுக்கு எதிரான பாலின பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குழந்தை திருமணம் , பெண் சிசு கொலை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை, பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் ஆகியவை குறித்து தெரிவித்து அதிலிருந்து வெளிவர 181 தொலைபேசி எண் உதவியாக இருக்கும் .

மேலும் இந்த எண்ணை பயன்படுத்தி பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இந்த எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பது ஆகியவை குறித்து மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

”வேண்டாம் வேண்டாம் பெண்களுக்கு எதிரான வன்முறை வேண்டாம். அவசியம் , அவசியம் பெண் கல்வி அவசியம். பெண் கல்வி எழுச்சி , குழந்தை திருமணம் இகழ்ச்சி. சிறு பிள்ளைகளுக்கு திருமணம், சிறை செல்ல நேரிடும்”

377

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையிலேந்தி 500 - க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:Local News, Vizhupuram

சிறந்த கதைகள்