இந்திய விமானப்படை குழு Y-ல் வேலைவாய்ப்பு குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் இளைஞர்களுக்கு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஆண் இந்திய குடிமக்களை விமானப்படை குழு 'Y' மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்ப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு தேர்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் வரும் பிப்ரவரி மாதம் 1 முதல் 8 வரையிலான வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது.
மருத்துவ உதவியாளர் (12ம் வகுப்பு மட்டும்) பணிக்கு திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும், 27/06/2002 முதல் 27/06/2006 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். இப்பணிக்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி, யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு (2 நிலைகள்) மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.
மரக்காணம் அருகே ரூ.25 கோடியில் பறவைகள் சரணாலயம்.. மகிழ்ச்சியில் விழுப்புரம் மக்கள்!
இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு
கோடை வெயிலால் எலுமிச்சை விலை அதிகரிப்பு.. விழுப்புரம் விவசாயிகள் மகிழ்ச்சி!
விழுப்புரத்தில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
விழுப்புரத்தில் 100 அரங்குகள் கொண்ட மாபெரும் புத்தக திருவிழா!
சிறுவர்களுக்கு பிடித்த பாட்ஷா பாய் பெட் ஷாப்.. எங்கு இருக்கு தெரியுமா?
ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் - பொதுமக்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் விழிப்புணர்வு..
மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில்.. விழுப்புரத்தில் எளியமுறையில் செய்முறை பயிற்சி!
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட புதிய அஞ்சலக வங்கி கணக்கை தொடங்குவது எப்படி? - விழுப்புரம் கலெக்டர் விளக்கம்
தென்பேர் கிராமசபை கூட்ட தீர்மானத்தை ஏற்று டாஸ்மாக் கடையை இடமாற்றுவதாக உறுதியளித்த விழுப்புரம் ஆட்சியர்..
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உயரம் 152.5 செ.மீட்டர். இருக்க வேண்டும். எனவே ஆர்வமுள்ளவர்கள் https://airmenselection.cdac.in/CASB/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து, தேர்வுமுறை, தேர்வு நாளன்று எடுத்து செல்லவேண்டிய ஆவணங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவலுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரிலோ அல்லது
04146 226417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு இளைஞர்கள் பயனடையலாம்” என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Army jobs, Local News, Villupuram