விழுப்புரம் மாவட்டத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பல வண்ணங்களிலும் பல வடிவங்களிலும் அகல் விளக்கு தயாரிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இந்த வருடம் புதுப்புது வடிவங்களில் பொதுமக்களுக்கு பிடித்தவாறு விளக்குகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கார்த்திகை தீப திருநாள் வருகிற 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் பொதுமக்கள் தங்களது வீடு, கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். களி மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளே இதற்கு அதிகம் பயன்படுத்துவார்கள்.
அதுவும் ஆண்டுதோறும் புது விளக்குகள் ஒன்றிறண்டாவது ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம். இதற்காக அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்தால்போதும்.. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் சொன்ன தகவல்..
கடலோர காவல்படையில் சேர இலவச பயிற்சி வகுப்பு - விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்
தென்பெண்ணை ஆற்று திருவிழாவை கொண்டாட விழுப்புரத்தில் குவிந்த 3 மாவட்ட மக்கள்
பிறந்து 50 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் வீசி கொலை.. இளம்பெண் விபரீத முடிவு - வரதட்சணை கொடுமையா? போலீஸ் விசாரணை
ஒன்றரை வயது குழந்தை உட்பட 2 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. விழுப்புரத்தில் சோகம்!
விதை விற்பனை - விழுப்புரம் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
விழுப்புரத்தில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்
விழுப்புரத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயில் திருவிழா
கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு
“உன் கல்யாணத்துக்காக ரெடி பண்ண ஸ்பெஷல் கிஃப்ட்..!” - மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த வித்தியாசமான அன்பளிப்பு
இதையும் படிங்க : விழுப்புரத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு பதிவு மையங்கள்
நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் கார்த்திகை தீப அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 5 ஸ்டார் ,7 ஸ்டார் அகல்விளக்குகள், ஒன் ஸ்டெப் அகல் விளக்குகள், 2 ஸ்டெப் அகல் விளக்குகள், கலசத் டோர் அகல் விளக்கு, தாமரைப்பூ விளக்குகள், நெய் விளக்கு, வீடு டூம் அகல்விளக்கு, ஹாங்கிங் தூம் அகல் விளக்குகள், மாய விளக்குகள், யானை விளக்குகள், தட்டு விளக்குகள், தண்ணீரில் எரியும் விளக்குகள் போன்ற பல வகைகளில் பல வண்ணங்களில் அகல்விளக்குகள் தயாரித்து வருகின்றனர் தொழிலாளர்கள்.
தயாரிக்கப்பட்ட இந்த அகல் விளக்குகள் ஒரு ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் விழுப்புரம் மாவட்டத்திலும் மற்றும் கேரளா, பாண்டிச்சேரி, சென்னை, கோயம்புத்தூர், வேலூர், காஞ்சிபுரம், திருப்பதி போன்ற பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட விளக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக இந்த வருட புதிய வரவாக மாய விளக்குகள் மற்றும் தண்ணீரில் எரியும் விளக்குகள் இருக்கிறது. மாய விளக்கு என்பது மற்ற விளக்குகளை விட வித்தியாசமாக இருக்கிறது. மற்ற விளக்குகளில் நேராக எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.
இதையும் படிங்க : விழுப்புரம் மாவட்ட மக்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.!
மாய விளக்குகளில் விளக்கை தலைகீழாக வைத்து அதில் உள்ள துளை வழியாக எண்ணெய் ஊற்றி பின் நேராக மாற்ற வேண்டும். விளக்கின் மேல் உள்ள துளை வழியாக திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் இந்த மாய விளக்குகள் பார்ப்பதற்கு மற்ற விளக்குகளை விட வித்யாசமாகவும் அழகாகவும் பல டிசைன்களிலும் இருப்பதால் பொதுமக்களுக்கு பிடித்துப் போகிறது என விளக்கு செய்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு பீஸ் மாய விளக்கு 150 ரூபாய் முதல் முன்னூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அகல் விளக்கு வடிவில் உள்ள பிளாஸ்டிக் விளக்குகளில் எண்ணெய் ஊற்றுவதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றினால் லைட் எரியும். இந்த பிளாஸ்டிக் அகல் விளக்கும் தற்போது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு விளக்கு ரூபாய் 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பல வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் விளக்குகள் இருப்பதால் அதை வாங்கிக் கொண்டு செல்வதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் வாடிக்கையாளர்கள்மற்றும் பொதுமக்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் நலிவடைந்து வரும் இந்த தொழிலை காக்க புதுப்புது யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் இந்த தொழிலாளர்களுக்கு ஒரு சல்யூட்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Local News, Vizhupuram