PREVNEXT
முகப்பு / செய்தி / திருச்சி / தனியாக வாக்கிங் சென்ற பெண்ணை தாக்கி சாலையில் தரதரவென இழுத்து சென்ற வாலிபர்.. திருச்சியில் பகீர் சம்பவம்..!

தனியாக வாக்கிங் சென்ற பெண்ணை தாக்கி சாலையில் தரதரவென இழுத்து சென்ற வாலிபர்.. திருச்சியில் பகீர் சம்பவம்..!

Crime News : திருச்சியில் தனியாக வாக்கிங் சென்ற பெண்ணை தாக்கி வழிப்பறி செய்த வாலிபரின் வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணை தாக்கிய வாலிபர்

பெண்ணை தாக்கிய வாலிபர்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வ.உ.சி. சாலை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சீதாலட்சுமி(53). இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், இசிசி துறை தலைவராகவும் பணிபுரிகிறார். கடந்த 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்றிருக்கிறார்.

இந்நிலையில், இவர் தனியாக நடைபயிற்சி செல்வதை கண்காணித்த மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்து, உருட்டு கட்டையால் தலையின் பின்புறம் அடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை தரதரவென்று இழுத்து ஓரமாக போட்டுவிட்டு, அவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து சீதாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கண்ட்டோன்மெண்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமனேரியை சேர்ந்த செந்தில்குமார் (32) என்பதும், குடிப்போதை மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான செந்தில்குமார் தற்போது தாராநல்லூர் கீரைக்கடை பஜாரில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

உங்கள் நகரத்திலிருந்து (திருச்சி)

'நீங்க தெய்வம் சார்' சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக தற்காலிக நிழற்குடை அமைத்த திருச்சி போலீசார்!

"யார் முதல்ல போகனும்" தனியார் பேருந்து ஓட்டுநர்களின் போட்டியால் உயிரிழந்த ஆசிரியை!

இறந்துபோன 3 வயது குழந்தைக்கு கோயில் கட்டி திருவிழா.. நாட்டார் தெய்வ வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?

திருச்சியில் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு!

குடிபோதையில் தாயிடம் தகராறு... தந்தையை அம்மிக்கல்லால் அடித்துக்கொன்ற மகன்... திருச்சியில் பயங்கரம்...!

குமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி? திருச்சி அருகே நள்ளிரவில் பயங்கரம்...!

ரயிலை கவிழ்க்கும் நோக்கில் டயர்கள் வைக்கப்பட்டதா..? தீவிரவாத சதிச் செயலா..? போலீசார் விசாரணை

திருச்சிக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குமான நெருக்கம்.. பிடித்த ஊரும் அதுதான்..!

திருச்சியில் ஒரு மினி குற்றாலம்..! சுற்றுலா பயணிகளை கவரும் புளியஞ்சோலை பார்க்..!

சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல்.. மளிகை கடைக்காரருக்கு 'தர்ம அடி' கொடுத்த பொதுமக்கள்

மண் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் : ஊராட்சி தலைவர் உட்பட 3 பேர் கைது

இதையும் படிங்க : நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்... காய்கறி வியாபாரி படுகொலை! - ஓசூர் அருகே பயங்கரம்!

இதையடுத்து அவரை போலீசார் பிடிக்க முயன்றபோது, திருடிய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று தடுப்புக் கட்டையில் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது கால் உடைந்தது. உடனடியாக அவரை மீட்ட போலீசார், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இதுகுறித்து அவர் மீது வழக்குப் பதிவுச் செய்து, இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாவாடை தாவணியில் நடிகை ஷெரினின் லேட்டஸ்ட் குயூட் போட்டோஸ்.!

top videos
  • வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கிய மாற்றுத்திறனாளி..! புதுவையில் நெகிழ்ச்சி..!
  • குறைந்த விலையில் புத்தக பைகள் வாங்க செம்ம ஸ்பாட்..! கோவையில் இங்க போங்க..!
  • இனிமையான குரலில் பாட்டுப்பாடி அசத்தும் மாற்றுத்திறனாளி..! விருதுநகர் சாலையோரத்தில் ஒலிக்கும் இசை..!
  • “கம்போடியா வரை காஞ்சி” - ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் நடத்தும் புகைப்படக் கண்காட்சி!
  • இனி பேருந்து, லாரி இயற்கை எரிவாயு மூலம் இயங்கும்..! காஞ்சியில் புதிய தொழில் நுட்பம் அறிமுகம்..!
  • இதற்கிடையில், தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட சீதாலட்சுமியை செந்தில்குமார் தாக்கி அவரை தரதரவென்று தார்ச்சாலையில் இழுத்துச் செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    377

    Tags:Crime News, Local News, Trichy

    முக்கிய செய்திகள்