PREVNEXT
முகப்பு / செய்தி / திருச்சி / மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்... ஆத்திரத்தில் மிளகாய்பொடி கலந்த கொதிக்கும் நீரை ஊற்றி கணவரை கொன்ற மனைவி!

மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்... ஆத்திரத்தில் மிளகாய்பொடி கலந்த கொதிக்கும் நீரை ஊற்றி கணவரை கொன்ற மனைவி!

Crime News : திருச்சி திருவெறும்பூரில் கொதிக்கும் நீரில் மிளகாய்தூள் கலந்து ஊற்றி கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை கொன்ற மனைவி

கணவனை கொன்ற மனைவி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 27). இவரது மனைவி டயானா மேரி(22). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. ஆட்டோ டிரைவரான செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை.

இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம், கோபித்துக் கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு திரும்ப செல்லவில்லை. உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் அதனை டயானா மேரி ஏற்கவில்லை.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி செல்வராஜ் மனைவியைத் தேடி மாமியார் வீட்டுக்குச் சென்றார். அப்போது டயானா மேரியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் ஒப்புக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், மனைவி டயானா மேரியை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.

உங்கள் நகரத்திலிருந்து (திருச்சி)

சட்டையில் கேமரா.. குற்றங்களை தடுக்க திருச்சி காவல்துறைக்கு நவீன கேட்ஜெட்ஸ்..

"யார் முதல்ல போகனும்" தனியார் பேருந்து ஓட்டுநர்களின் போட்டியால் உயிரிழந்த ஆசிரியை!

சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல்.. மளிகை கடைக்காரருக்கு 'தர்ம அடி' கொடுத்த பொதுமக்கள்

திருச்சியில் ஒரு மினி குற்றாலம்..! சுற்றுலா பயணிகளை கவரும் புளியஞ்சோலை பார்க்..!

'நீங்க தெய்வம் சார்' சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக தற்காலிக நிழற்குடை அமைத்த திருச்சி போலீசார்!

இறந்துபோன 3 வயது குழந்தைக்கு கோயில் கட்டி திருவிழா.. நாட்டார் தெய்வ வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?

திருச்சியில் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு!

தென் திருப்பதிக்கு செல்ல ஆபத்தான சாலையில் "ரிஸ்க்" எடுக்கும் பக்தர்கள்!

திருச்சிக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குமான நெருக்கம்.. பிடித்த ஊரும் அதுதான்..!

குமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி? திருச்சி அருகே நள்ளிரவில் பயங்கரம்...!

மண் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் : ஊராட்சி தலைவர் உட்பட 3 பேர் கைது

இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற டயானா மேரி வீட்டில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் கணவர் மீது ஊற்றிவிட்டார். இதில் உடல் வெந்து செல்வராஜ் வலியால் அலறி துடித்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதையும் படிங்க : தனியாக வாக்கிங் சென்ற பெண்ணை தாக்கி சாலையில் தரதரவென இழுத்து சென்ற வாலிபர்.. திருச்சியில் பகீர் சம்பவம்..!

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் செல்வராஜ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மனைவி ஊற்றிய சுடுநீர் அவரது அடிவயிற்றில் பட்டு ஆழமான காயம் ஏற்பட்டதால் கிட்னி பாதித்து இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி டயானா மேரி, மாமியார் இன்னாசியம்மாள் (43) ஆகியோரை கைது செய்தனர்.

கோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி? தமிழ் நாடு சுகாதாரத்துறை அறிவுரை

377

மேலும் போலீசார் நடநத்திய விசாரணையில் கொலையான செல்வராஜ், தனது மாமியாருடன் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், அதனை மனைவி மற்றும் மாமியார் கண்டித்தபோதும், தொடர்ந்து அவர் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கொதிக்கும் நீரில் மிளகாய் பொடியை கலந்து ஊற்றி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கைதான அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர். குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • செய்தியாளர் : கோவிந்தராஜ் - திருச்சி

    Tags:Crime News, Local News, Trichy

    முக்கிய செய்திகள்