PREVNEXT
முகப்பு / செய்தி / திருச்சி / கோடை வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு இளநீர் மில்க்‌ஷேக்.. திருச்சி மக்களின் ஃபேவரைட் இளநீர் ஜூஸ் கடை.. 

கோடை வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு இளநீர் மில்க்‌ஷேக்.. திருச்சி மக்களின் ஃபேவரைட் இளநீர் ஜூஸ் கடை.. 

Tender Coconut Juice Shop | கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க மக்கள் குளிர்ச்சியான பானங்களை தேடித் தேடி அருந்துகின்றனர், அந்த வகையில், திருச்சி மக்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது இளநீர் ஜூஸ் கடை. 

திருச்சி மக்களின் கோடை தாகத்தை தணிக்க இப்ராஹிம் என்ற இளநீர் வியாபாரி இளநீரில் மில்க்‌ஷேக் மற்றும் ஜூஸ் ஆகியவற்றை தயாரித்து கொடுத்து அசத்தி வருகிறார். இவரின் இளநீர் ஜூஸ் சுவைக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

திருச்சியில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக ஏதாவது குடிக்கவேண்டும் என ஆசைப்படுபவர் என்றார் நீங்கள் வரவேண்டிய இடம் இப்ராஹிம் இளநீர் ஜூஸ் கடை. இளநீர் தெரியும் அதென்ன இளநீர் ஜூஸ், இதன் சுவைக்கு ஏன் அப்படி ஒரு ரசிகர் பட்டாளம் என அறிந்துகொள்ள நாம் அவரின் கடைக்கே நேரடியாக சென்றோம்.

கோடை வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு இளநீர் மில்க்‌ஷேக்

உங்கள் நகரத்திலிருந்து (திருச்சி)

திருச்சியில் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு!

மண் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் : ஊராட்சி தலைவர் உட்பட 3 பேர் கைது

இறந்துபோன 3 வயது குழந்தைக்கு கோயில் கட்டி திருவிழா.. நாட்டார் தெய்வ வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?

சட்டையில் கேமரா.. குற்றங்களை தடுக்க திருச்சி காவல்துறைக்கு நவீன கேட்ஜெட்ஸ்..

சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறல்.. மளிகை கடைக்காரருக்கு 'தர்ம அடி' கொடுத்த பொதுமக்கள்

குமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி? திருச்சி அருகே நள்ளிரவில் பயங்கரம்...!

'நீங்க தெய்வம் சார்' சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக தற்காலிக நிழற்குடை அமைத்த திருச்சி போலீசார்!

திருச்சியில் ஒரு மினி குற்றாலம்..! சுற்றுலா பயணிகளை கவரும் புளியஞ்சோலை பார்க்..!

தென் திருப்பதிக்கு செல்ல ஆபத்தான சாலையில் "ரிஸ்க்" எடுக்கும் பக்தர்கள்!

"யார் முதல்ல போகனும்" தனியார் பேருந்து ஓட்டுநர்களின் போட்டியால் உயிரிழந்த ஆசிரியை!

திருச்சிக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குமான நெருக்கம்.. பிடித்த ஊரும் அதுதான்..!

இதுகுறித்து இப்ராஹிம் கூறுகையில், “நாங்கள் 60 வருடமாக 3 தலைமுறையாக இதே இடத்தில் இளநீர் கடை நடத்தி வருகிறோம். தள்ளுவண்டியில் தான் கடையே, காலை 8 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணி வரை இயங்குகிறது. 60 வருடங்களாக இருந்தாலும் தற்போது 4 வருடங்களாக நான் கொடுக்கும் இந்த இளநீர் குருத்து ஜூஸிற்கும், இளநீர் மில்க் ஷேக்கிற்கும் தான் ரசிகர்கள் ஏராளம்.

மதுரை வாசிகளை சுண்டி இழுக்கும் முட்டை போண்டா கடை பற்றி தெரியுமா ?

எனது தந்தை இளநீர் விற்பனை தான் ரொம்ப வருடமாக செய்துகொண்டிருந்தார். நானும் தொடர்ந்து அதைத்தான் செய்துகொண்டு இருந்தேன். ஆனால், எனக்கு ஏதோ ஒரு மன திருப்தியின்மை வந்தது. எல்லோருக்கும் ஒரே அளவில் ஒரே சுவையில் கொடுக்க முடியவில்லை என தோன்றியது. இதனால் இளநீரை ஜூஸா செய்து எல்லாருக்கும் ஒரே மாதிரி கொடுக்கலாம் என்று நினைத்தேன். அதன்படியே இந்த இளநீர் ஜூஸ் ஐடியா எனக்கு வந்தது. தினசரி 300 பேர் வரைக்கும் கடைக்கு வந்து செல்கின்றனர்.

இதையும் படிங்க  : மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்... ஆத்திரத்தில் மிளகாய்பொடி கலந்த கொதிக்கும் நீரை ஊற்றி கணவரை கொன்ற மனைவி!

377

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • இது என் மனதுக்கு நிறைவாக உள்ளது. இன்னும் புதிய ஐடியா எல்லாம் இருக்கு. இனி வரும் நாட்களில் அதை எல்லாம் செய்யலாம் என்று இருக்கிறேன்” என்று கூறி வாடிக்கையாளர் ஒருவர் வர அவருக்கு ஜூஸ் கொடுக்க வேண்டும் என்று கூறி நம்மிடமிருந்து விடை பெற்றார்.

    Tags:Local News, Trichy

    முக்கிய செய்திகள்