தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா இன்றும், நாளையும் நடக்கிறது. இந்த திருவிழாவிற்கு தூத்துக்குடி, திருச்செந்தூர், கடம்பூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஜோதி எடுத்து வருவது வழக்கம்.
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திர போராட்டத்திற்கு முதல் குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மற்றும் வீரசக்க தேவி உற்சவ ஆலய திருவிழா இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவின் துவக்கமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பாக இருந்து வீரபாண்டிய கட்ட பொம்மனின் நினைவு ஜோதி நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்ச்சியாக கொண்டாடபட்டு வருகிறது.
பாஞ்சாலஞ்குறிச்சி நோக்கி ஜோதி ஓட்டம்
வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி - தூத்துக்குடி விவசாயிகள் கவலை
ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு.. தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மக்கள் குற்றச்சாட்டு..
அம்மா உணவக சாப்பாட்டில் அரணை - தூத்துக்குடியில் அதிர்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் 5,799 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிப்பு
அரசு பள்ளியில் பட்டியலின பெண் உணவு சமைத்ததற்கு எதிா்ப்பு - நியூஸ்18 எதிரொலியாக நேரில் ஆய்வு செய்த அமைச்சர்!
இன்ஸ்டாவில் அரிவாளுடன் ரீல்ஸ் வீடியோ.. நடத்துனரை தட்டித்தூக்கிய போலீஸ்
சாகச விளையாட்டுக்களுடன் வெளிநாடு போல மாறப்போகும் தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரை..!
வாகைக்குளம் சுங்கச்சாவடி தொடர்பாக நீதிபதிகள் கடும் அதிருப்தி
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு... செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்... தூத்துக்குடியில் பரபரப்பு!
மாநகராட்சி பள்ளிக்கு திடீர் விசிட்.. மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட தூத்துக்குடி எஸ்.பி.பாலாஜி
இதனை தொடர்ந்து இந்த ஜோதி ஓட்டமானது பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி சென்றது. இந்த கட்டபொம்மனின் நினைவு ஜோதி கொண்டு செல்லும் போது வீரசக்க தேவி குழுவினர் ஜோதிக்கு முன்பாக மேள தாளங்கள் முழங்கப்பட்டு ஆரவாரத்துடன் கொண்டு சென்றனர் மேலும் இந்நிகழ்வின் போது இவர்களது இருசக்கர வாகனங்கள் காவல் துறையினரால் உள்ளே அனுமதிக்க படாமல் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . அதனை தொடர்ந்து ஜோதி இங்கிருந்து தொடங்கி பாஞ்சாலங்குறிச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஜோதி கொண்டு வர தடையும் - நீக்கமும்
முன்னதாக, கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயத்தாற்றில் இருந்து ஜோதி கொண்டு வர முயன்ற போது காவல்துறையினர் இரண்டு சக்கர வாகனத்திற்கு அனுமதி மறுத்தனர் இதையடுத்து ஜோதி அங்கேயே நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக வீரபாண்டிய கட்டபொம்மன் சந்ததியினர் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆலய விழா குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு பகுதியில் இருந்து ஜோதிகள் தடையின்றி கொண்டுவர அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
போலீசார் குவிப்பு
வீரசக்க தேவி உற்சவ ஆலய திருவிழாவையொட்டி திருச்செந்தூர், பாஞ்சாலங்குறிச்சி போன்ற பகுதிகளில் காவல்துறையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.
பி.முரளிகணேஷ் (தூத்துக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Local News, Tuticorin