PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / டாஸ்மாக்கில் கட்டிட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்... கோவில்பட்டியில் பகீர் சம்பவம்!

டாஸ்மாக்கில் கட்டிட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்... கோவில்பட்டியில் பகீர் சம்பவம்!

Thoothukudi attack | படுகாயமடைந்த கட்டிட தொழிலாளியை மீட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறது.

பாரில் நடந்த தாக்குதல்

பாரில் நடந்த தாக்குதல்

தூத்துக்குடியில் டாஸ்மாக்கில் மது அருந்திய கட்டிட தொழிலாளி மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் பாண்டவர்மங்கலம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் வெள்ளிக்கிழமை இரவு பாண்டவர்மங்கலத்தினை சேர்ந்த கட்டிட தொழிலாளி சக்திவேல் என்பவர் சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவரது அருகே மது அருந்திக்கொண்டு இருந்த 4 பேரில் ஒருவர் திடீரென எழுந்து கையில் வைத்திருந்த மது பாட்டிலை கொண்டு சக்திவேல் தலையில் ஓங்கி அடித்தார். மேலும் மற்ற 3 பேரும் சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, அங்கிருந்த சேரை எடுத்தும் தாக்கினர்.

தொடர்ந்து தாக்குதலை தடுக்க முயன்றவர்கள் மீதும் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து டாஸ்மாக் பார் நடத்துபவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் வந்ததை அறிந்ததும் சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையெடுத்து காயமடைந்த சக்திவேலை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது , சக்திவேல் மீது தாக்குதல் நடத்திய கும்பல் போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது போலீசாரையும் மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த சக்திவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்பிரச்சினை குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து டாஸ்மாக் பாரில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

அரசு பள்ளியில் பட்டியலின பெண் உணவு சமைத்ததற்கு எதிா்ப்பு - நியூஸ்18 எதிரொலியாக நேரில் ஆய்வு செய்த அமைச்சர்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 5,799 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிப்பு

ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு.. தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மக்கள் குற்றச்சாட்டு..

இன்ஸ்டாவில் அரிவாளுடன் ரீல்ஸ் வீடியோ.. நடத்துனரை தட்டித்தூக்கிய போலீஸ்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு... செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...

சாகச விளையாட்டுக்களுடன் வெளிநாடு போல மாறப்போகும் தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரை..!

வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி - தூத்துக்குடி விவசாயிகள் கவலை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்... தூத்துக்குடியில் பரபரப்பு!

மாநகராட்சி பள்ளிக்கு திடீர் விசிட்.. மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட தூத்துக்குடி எஸ்.பி.பாலாஜி

வாகைக்குளம் சுங்கச்சாவடி தொடர்பாக நீதிபதிகள் கடும் அதிருப்தி

அம்மா உணவக சாப்பாட்டில் அரணை - தூத்துக்குடியில் அதிர்ச்சி

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாண்டவர்மங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரனார் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் புகைப்படங்களை சிலர் அவமரியாதை செய்தனர். அந்த பிரச்சினையில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சக்திவேல் மற்றும் சிலர் போராட்டத்தினை முன்னெடுத்தனர். அந்த பிரச்சினை காரணமாக சக்திவேல் தாக்கப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னை தாக்க வந்தவர்கள், தன்னை மட்டுமின்றி, ஒரு காவலரையும் வெட்டி முயன்றதாகவும், காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வது மட்டுமின்றி, தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தாக்குதலுக்கான சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Top Videos
  • பாதமே சரணம்.. நாமக்கல்லில் உருவமின்றி பாதங்களை மட்டும் வைத்து வழிபடும் வினோதம்!
  • Tags:Attack, CCTV, Crime News, Thoothukudi

    முக்கிய செய்திகள்