PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / மதுபோதையில் அரசுப்பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்.. அலறிய பயணிகள்..!

மதுபோதையில் அரசுப்பேருந்தை தாறுமாறாக இயக்கிய ஓட்டுநர்.. அலறிய பயணிகள்..!

thoothukudi | தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு புறப்பட்ட பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் இயக்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

அரசு பேருந்து

அரசு பேருந்து

தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு சென்ற பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் தாறுமாறாக இயக்கியதால் பொதுமக்கள் அலறியடித்து கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு மதுரைக்கு சென்ற அரசு பேருந்தை ஓட்டுநர் மது போதையில் தாறுமாறாக இயக்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்திற்குள்ளேயே கூச்சலிட்டு பேருந்தை நிறுத்த சொல்லியுள்ளனர். மேலும், பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவித்து பேருந்தை நிறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளும் மாற்று பேருந்தில் ஏற்றப்பட்டு மதுரைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

“அரசியல் என்பது பல்கலைகழகம்... நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்...” பாடலாசிரியர் பா.விஜய் ஓப்பன் டாக்..!

தாலியை அடகுவைக்கும் தாய்மார்களுக்கு அரசு என்ன செய்யும்... சீமான் ஆவேசம்

நடுக்கடலில் மிதந்த மர்ம படகு.. போதைப்பொருள் கடத்தலா? - 6 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்

கண்மாய் நீரில் மூழ்கி 3பள்ளி மாணவர்கள் மரணம்.. விளாத்திகுளத்தில் நிகழ்ந்த சோகம்...

82 மூட்டைகளில் 2,000 கிலோ கஞ்சா... தூத்துக்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்த போலீஸ்...!

டாஸ்மாக்கில் கட்டிட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்... கோவில்பட்டியில் பகீர் சம்பவம்!

ரூ.30 கோடி மதிப்புள்ள 18 கிலோ திமிங்கலம் எச்சம் பதுக்கல்.. அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது

கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி கோவில் திருவிழா.. தடைகளுக்கு பின் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி ஜோதி ஓட்டம்..

“கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்” - சீமான் கேள்வி

ஸ்டெர்லைட் கலவரம்: ‘துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் எங்கள் கண் முன்னே நடமாடுகிறார்கள்’

போலி நிறுவனங்கள் முகவர்கள் கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம் - தூத்துக்குடி துறைமுகம் எச்சரிக்கை

செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

Tags:Govt Bus, Thoothukodi

முக்கிய செய்திகள்