PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளை..! யூடியூப் பார்த்து திருட வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்

வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளை..! யூடியூப் பார்த்து திருட வந்ததாக கைதானவர்கள் வாக்குமூலம்

Thoothukudi theft | பல நாட்களாக ஸ்கெட்ச் போட்டு வந்த திருடர்கள் பக்காவாக திருடிவிட்டு வெளியே சென்ற போது போலீசாரிடம் சிக்கி கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே யூடியூப் பார்த்து வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களை போலீசார் துரத்தி பிடித்தனர்.

தவம் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பொருட்களை திருடிவிட்டு போலீசாரிடம் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதே போன்று தூத்துக்குடி அருகேயும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து தூத்துக்குடியில் உள்ள கார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.

மாரிமுத்துவின் உறவினரான மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் சுகாதாரத்துறையில் தற்காலிக பணியாளராக கொசு மருந்து தெளிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து  விளாத்திகுளம் மதுரை ரோட்டில் அமைந்துள்ள‌ ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான "ராஜலட்சுமி ஜூவல்லர்ஸ்" என்ற நகைக்கடையில் கேஸ் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி கடை ஷட்டரை உடைத்து கடையில் இருந்த 13 சவரன் தங்க நகை, 25 கிலோ மதிக்கத்தக்க வெள்ளி கொலுசு, வெள்ளிப் பொருட்கள் மற்றும்  ரூ.12,500 ரொக்க பணம் என மொத்தமாக சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

ரூ.30 கோடி மதிப்புள்ள 18 கிலோ திமிங்கலம் எச்சம் பதுக்கல்.. அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது

போலி நிறுவனங்கள் முகவர்கள் கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம் - தூத்துக்குடி துறைமுகம் எச்சரிக்கை

“அரசியல் என்பது பல்கலைகழகம்... நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்...” பாடலாசிரியர் பா.விஜய் ஓப்பன் டாக்..!

ஸ்டெர்லைட் கலவரம்: ‘துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் எங்கள் கண் முன்னே நடமாடுகிறார்கள்’

கண்மாய் நீரில் மூழ்கி 3பள்ளி மாணவர்கள் மரணம்.. விளாத்திகுளத்தில் நிகழ்ந்த சோகம்...

டாஸ்மாக்கில் கட்டிட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்... கோவில்பட்டியில் பகீர் சம்பவம்!

82 மூட்டைகளில் 2,000 கிலோ கஞ்சா... தூத்துக்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்த போலீஸ்...!

கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி கோவில் திருவிழா.. தடைகளுக்கு பின் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி ஜோதி ஓட்டம்..

“கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்” - சீமான் கேள்வி

தாலியை அடகுவைக்கும் தாய்மார்களுக்கு அரசு என்ன செய்யும்... சீமான் ஆவேசம்

நடுக்கடலில் மிதந்த மர்ம படகு.. போதைப்பொருள் கடத்தலா? - 6 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாட்ச்மேன் ஒருவர் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் கொள்ளையர்களை துரத்தி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நகை, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Also Read:  மூலிகை ஆயில் பெயரில் மோசடி : தொழிலதிபர்களிடம் ரூ.20 கோடி சுருட்டிய நைஜீரிய கும்பல் - சிக்கியது எப்படி?

விசாரணையில் இருவரும் திருடுவதற்கு தயாராகி தேவையான பொருட்களை நகைக்கடையின் மாடியில் வைத்துள்ளனர். தொடர்ந்து மறுநாள் நகைக்கடையின் மாடிக்கு சென்ற இவர்கள், கடை பூட்டிய பிறகு நள்ளிரவில் கீழே இறங்கி யூடியூப் பார்த்து கட்டிங் மெஷின், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு  ஷட்டரை உடைத்து கடைக்குள் நுழைந்துள்ளனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராவை செலோடேப் போட்டு ஒட்டியுள்ளனர்.

தொடர்ந்து கடைக்குள் சென்ற அவர்கள் கடையில் இருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம் என அனைத்தையும் சுருட்டி கொண்டு, வடிவேலு பட பாணியில் மோப்பநாயிடம் சிக்கி விடக்கூடாது என நினைத்து திருடிய இடம் முதல் கடை வாசல் வரை மிளகாய் பொடியை தூவியுள்ளனர்.இப்படி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வந்த இவர்கள், மாடியில் இருந்து கீழே குதிக்கும் போது கால் இடறி கீழே விழுந்து வாட்ச்மேன் கண்ணில் சிக்கியுள்ளனர்.

377

வாட்ச்மேனோ சற்றும் தாமதிக்காமல் போலீசாரை அழைத்துள்ளார். அப்போது இருவரும் போலீசாரிடம் மாட்டி கொண்டுள்ளனர். மேலும், அவர்களை சோதித்ததில் இருவரிடமும் போலி கட்சி விசிட்டிங் கார்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருவருமே தங்களை ஒரு கட்சி நிர்வாகிகள் என கூறி கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஏற்கனவே இவர்கள், இந்த கடைக்கு அருகில் உள்ள கடையில் கொள்ளையடிக்க முயற்சித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: மகேஷ்வரன், தூத்துக்குடி.

Tags:Crime News, Local News, Theft, Thoothukudi, Tuticorin

முக்கிய செய்திகள்