PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / “கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்” - சீமான் கேள்வி

“கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்” - சீமான் கேள்வி

ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி கோடநாடு கொலைக்கு பதவி விலகி இருக்க வேண்டும் அவர் பதவி வழங்கினாரா? - சீமான் கேள்வி

சீமான்

சீமான்

தூத்துக்குடியில் வரும் 18-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. மாநாடு பணிகளை கவனிப்பதற்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி வந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு பத்து லட்சம். கள்ளச்சாரயம் விற்பனை செய்தவர்களிடம் பணம் வாங்கி நிவாரணம் வழங்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தை வைத்து எப்படி முதல்வர் நிவாரணம் வழங்கலாம்” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும்,  “கள்ளச்சாராய சாவு வரவில்லை என்றால் இன்று இவ்வளவு கள்ள சாராய வழக்கு பதிவு செய்திருக்க மாட்டார்கள். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு இந்த அரசு பதவி உயர்வு கொடுத்துள்ளது. திமுக சொத்துபட்டியலை வெளியிட அண்ணாமலை அதிமுகவினரின் சொத்துபட்டியலையும் வெளியிட்டிருக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததற்கு ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி கோடநாடு கொலைக்கு பதவி விலகி இருக்க வேண்டும் . முதல்வர் வசித்த வீட்டில் மின்தடை ஏற்பட்டு ஆறு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் அதற்காக எடப்பாடி பழனிசாமி விலகினாரா” எனக் கேள்வி எழுப்பினார்.

அரசு பள்ளியில் பட்டியலின பெண் உணவு சமைத்ததற்கு எதிா்ப்பு - நியூஸ்18 எதிரொலியாக நேரில் ஆய்வு செய்த அமைச்சர்!

வாகைக்குளம் சுங்கச்சாவடி தொடர்பாக நீதிபதிகள் கடும் அதிருப்தி

சாகச விளையாட்டுக்களுடன் வெளிநாடு போல மாறப்போகும் தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரை..!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்... தூத்துக்குடியில் பரபரப்பு!

அம்மா உணவக சாப்பாட்டில் அரணை - தூத்துக்குடியில் அதிர்ச்சி

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு... செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...

இன்ஸ்டாவில் அரிவாளுடன் ரீல்ஸ் வீடியோ.. நடத்துனரை தட்டித்தூக்கிய போலீஸ்

மாநகராட்சி பள்ளிக்கு திடீர் விசிட்.. மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட தூத்துக்குடி எஸ்.பி.பாலாஜி

வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி - தூத்துக்குடி விவசாயிகள் கவலை

ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு.. தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மக்கள் குற்றச்சாட்டு..

தூத்துக்குடி மாவட்டத்தில் 5,799 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிப்பு

இரண்டு பேரும் மாற்றி மாற்றி கூறி வருகிறார்கள் இரண்டு பேரும் ஒழிக்கப்பட வேண்டும். நான் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களில் கொடநாடு வழக்கை விசாரணை செய்து முடிப்பேன் என்ற இப்போதைய முதல்வர் இரண்டு ஆண்டு காலம் ஆகிவிட்டது என்ன செய்தார். தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்வெட்டு குறைய வேண்டும் என்றால் மாற்று அரசு வேண்டும் ” என்றார்.

செய்தியாளர் : முரளிகணேஷ் (தூத்துக்குடி )

Top Videos
  • பாதமே சரணம்.. நாமக்கல்லில் உருவமின்றி பாதங்களை மட்டும் வைத்து வழிபடும் வினோதம்!
  • Tags:Politics, Seeman, Tamil News

    முக்கிய செய்திகள்