PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / தாலியை அடகுவைக்கும் தாய்மார்களுக்கு அரசு என்ன செய்யும்... சீமான் ஆவேசம்

தாலியை அடகுவைக்கும் தாய்மார்களுக்கு அரசு என்ன செய்யும்... சீமான் ஆவேசம்

தமிழகத்தில் கல்வி முறை மிக கொடுமையான முறையில் நடைபெற்று வருவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் விமர்சனம் செய்துள்ளார்.

சீமான்

சீமான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவரான முருகனை வழிபட்டார். பின்னர் கோவில் உற்சாகத்தில் உள்ள சண்முகர், பெருமாள், தட்சணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை  வணங்கி சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ’விஷசாராயம்  குடித்தவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் அரசு படிப்பிற்காக தாலியை அடமானம் வைக்கும் தாய்மார்களுக்கு என்ன செய்யப் போகிறது இந்த திராவிட மாடல் அரசு என கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 5,799 இடங்களில் இருந்த சாதிய அடையாளங்கள் அழிப்பு

வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி - தூத்துக்குடி விவசாயிகள் கவலை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்... தூத்துக்குடியில் பரபரப்பு!

அம்மா உணவக சாப்பாட்டில் அரணை - தூத்துக்குடியில் அதிர்ச்சி

ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு.. தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மக்கள் குற்றச்சாட்டு..

வாகைக்குளம் சுங்கச்சாவடி தொடர்பாக நீதிபதிகள் கடும் அதிருப்தி

சாகச விளையாட்டுக்களுடன் வெளிநாடு போல மாறப்போகும் தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரை..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு... செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு...

இன்ஸ்டாவில் அரிவாளுடன் ரீல்ஸ் வீடியோ.. நடத்துனரை தட்டித்தூக்கிய போலீஸ்

அரசு பள்ளியில் பட்டியலின பெண் உணவு சமைத்ததற்கு எதிா்ப்பு - நியூஸ்18 எதிரொலியாக நேரில் ஆய்வு செய்த அமைச்சர்!

மாநகராட்சி பள்ளிக்கு திடீர் விசிட்.. மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட தூத்துக்குடி எஸ்.பி.பாலாஜி

தொடர்ந்து பேசிய அவர், ’ஜல்லிக்கட்டு தொடர்பாக  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கதக்கதாகவும், சட்டப் போராட்டத்தில் தனக்கு அச்சம் இருந்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் வெளி நடப்பு தான் இருக்கிறது தவிர விவாதம் ஒன்றும் நடைபெறவில்லை என்றார்.

இதையும் படிங்க: ரயில் ஓட்டுநர்கள் எவ்வளவு நேரம் ரயிலை இயக்குவார்கள்..? ஏன் ரயிலுக்கு மட்டும் 2 ஓட்டுநர்கள் கொடுக்கப்படுகிறது.?

377

தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழகத்தில் கல்வி முறை மிக கொடுமையான முறையில் நடைபெற்று வருவதாகவும் தாய்மார்கள் மிக ஏழ்மையான நிலையில் இருப்பதனால் நகைகளை அடகு வைத்து தான் கல்லூரிகளில் சேர்க்கவேண்டும் என்ற நிலைமை உள்ளது. கல்வி இடைநிற்றலைத் தவிர்ப்பதற்கு தான் ஆயிரம் ரூபாய்  வழங்கப்படுகின்றது என்று திமுக அரசு கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்க தான் செய்கிறது.

மேலும் விஷச் சாராயம் குடித்தவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் அரசு படிப்பிற்காக தாலியை அடமானம் வைக்கும் தாய்மார்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? என்றும் ஆட்சியாளர்கள் சாராய ஆலைகளை நடத்துவதால் தமிழ்நாட்டில் மட்டும் கள் இறக்குவதற்கு  அனுமதியில்லை. கூட்டாட்சி நாடான இந்தியாவில் பாஜக மற்றும்  காங்கிரஸ் ஆள வேண்டாம் எனவும் சுழற்சி முறையில் கூட்டாட்சி  தத்துவத்தின் அடிப்படையில் கட்சிகள் ஆளவேண்டும் என பேசினார்.

தினமும் டீ கடைக்கு வந்து பால் ஏடு வாங்கி செல்லும் காகம்.! வீடியோ

மேலும் காவிரி படுகையில் உள்ள தாதுக்களை எடுக்கும் இந்த அரசு  ஏன் கங்கை படுகையில் அதை செய்யவில்லை? திருமாவளவன் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவது என்பது அவரது தனிப்பட்ட கருத்து எனவும் கூறினார்.

செய்தியாளர் - பி.முரளி கணேஷ், தூத்துக்குடி.

Top Videos
  • பாதமே சரணம்.. நாமக்கல்லில் உருவமின்றி பாதங்களை மட்டும் வைத்து வழிபடும் வினோதம்!
  • Tags:Seeman, Thoothukudi

    முக்கிய செய்திகள்