PREVNEXT
முகப்பு / செய்தி / தூத்துக்குடி / மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு.. தொழிலாளியை கொலை செய்த நண்பன் கைது..!

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு.. தொழிலாளியை கொலை செய்த நண்பன் கைது..!

மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

1) பெரியமாரியப்பன் 2) மணிகண்டன்

1) பெரியமாரியப்பன் 2) மணிகண்டன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி கிராமத்தினை சேர்ந்தவர் பெரிய மாரியப்பன் (55). இவர் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இதே ஊரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). முதலில் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்த மணிகண்டன் தற்பொழுது கட்டிட வேலைக்கு சென்று வருவதாக தெரிகிறது. பெரிய மாரியப்பன், மணிகண்டன் இருவரும் வேலை முடிந்ததும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

வழக்கம் போல கடந்த 19ஆம் தேதி இரவும் இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் அங்குள்ள மடம் அருகே வந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு உண்டாகியுள்ளது. இதையடுத்து மாரியப்பன் வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து மணிகண்டன் காலில் வெட்டியுள்ளார். மேலும் தடுக்க முயன்ற போது கையிலும் வெட்டு விழுந்துள்ளது. இதையெடுத்து சுதாரித்து கொண்ட மணிகண்டன், பெரிய மாரியப்பன் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி, அவரை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்தில் பெரிய மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாவனி ரெட்டியை இயக்கும் பிக் பாஸ் அமீர்... ஹீரோ யார் தெரியுமா.?

உங்கள் நகரத்திலிருந்து (தூத்துக்குடி)

போலி நிறுவனங்கள் முகவர்கள் கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம் - தூத்துக்குடி துறைமுகம் எச்சரிக்கை

ஸ்டெர்லைட் கலவரம்: ‘துப்பாக்கி சூடு நடத்திய காவலர்கள் எங்கள் கண் முன்னே நடமாடுகிறார்கள்’

கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி கோவில் திருவிழா.. தடைகளுக்கு பின் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி ஜோதி ஓட்டம்..

82 மூட்டைகளில் 2,000 கிலோ கஞ்சா... தூத்துக்குடியில் அதிரடியாக பறிமுதல் செய்த போலீஸ்...!

கண்மாய் நீரில் மூழ்கி 3பள்ளி மாணவர்கள் மரணம்.. விளாத்திகுளத்தில் நிகழ்ந்த சோகம்...

நடுக்கடலில் மிதந்த மர்ம படகு.. போதைப்பொருள் கடத்தலா? - 6 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அதிகாரிகள்

தாலியை அடகுவைக்கும் தாய்மார்களுக்கு அரசு என்ன செய்யும்... சீமான் ஆவேசம்

“அரசியல் என்பது பல்கலைகழகம்... நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்...” பாடலாசிரியர் பா.விஜய் ஓப்பன் டாக்..!

“கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதுக்கு ரூ.10 லட்சம்” - சீமான் கேள்வி

டாஸ்மாக்கில் கட்டிட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்... கோவில்பட்டியில் பகீர் சம்பவம்!

ரூ.30 கோடி மதிப்புள்ள 18 கிலோ திமிங்கலம் எச்சம் பதுக்கல்.. அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது

இதுகுறித்து தகவல் கிடைத்தும் நாலாட்டின்புதூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பாற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு காயத்துடன் இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். தற்போது, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:Crime News, Kovilpatti, Murder

முக்கிய செய்திகள்