PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவேன்... ஓபிஎஸ் சொன்ன பதில்..!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவேன்... ஓபிஎஸ் சொன்ன பதில்..!

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினரை சேர்ப்பதற்கும், ஏற்கனவே உறுப்பினராக இருப்பவரை புதுப்பிப்பதற்கும் கழக சட்ட விதிகள் உள்ளது என ஓபிஎஸ் பேட்டி

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

மயிலாடுதுறை அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் கஜேந்திரன் இல்ல திருமணத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்திய பிறகு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,   “ஒற்றுமையாக இருந்தால் அதிமுக வெற்றி பெறும். சாதாரண தொண்டர் கூட கழகத்தின் உச்ச பதவிக்கு போட்டியிடலாம் என்ற விதிமுறையை மாற்றி  பொதுச்செயலாளர் பதவிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய, 10 மாவட்டச் செயலாளர் வழிமொழிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சட்டத்தை திருத்தி உள்ளார். இதைத்தான் நாங்கள் கூடாது என்கிறோம்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா 50 ஆண்டுகாலம் கழக சட்ட விதிப்படி கட்சியை வழிநடத்தி, மகத்தான வெற்றிக்கு வழிவகுத்தனர். தமிழகத்தில் முழுமையாக ஆளுகின்ற உரிமை பெற்ற கட்சி அதிமுக என்ற நிலையை உருவாக்கி உள்ளனர். அதைத்தான் நாங்களும் வழிமொழிகிறோம்.

அதிமுக சட்ட விதிப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும்.  ஏற்கனவே உள்ள பழைய உறுப்பினர்களை தங்கள் அட்டையை புதுப்பிக்க வேண்டும்.  கழகத்தின் சட்ட விதிப்படி அவர்களுக்கெல்லாம் புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் அட்டை வழங்கப்பட்டவர்களை வைத்து பொதுச் செயலாளர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட வேண்டும். அப்படி செய்தால் உறுதியாக, கீழ் மட்ட தொண்டர்கள் கூட தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகும். அப்படிப்பட்ட சூழ்நிலைதான் ஜெயலலிதா காலம் வரை கடைபிடிக்கப்பட்டது. அதை மாற்றக்கூடாது என்று சொல்லி இருக்கிறோம்” என்றார்.

இதையும் படிக்க : கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணங்கள் அறிவிப்பு..!

மேலும் செய்தியாளரின் கேள்விக்கு “ பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச் செயலாளர் பதவிக்கு நான் போட்டிடுவேன்” என்று ஓபிஎஸ் பதிலளித்தார்.

 

top videos
  • ”Finals-ல தோனிக்கிட்ட பேசும்போது இந்த அட்வைஸ் கொடுத்தாரு” -சாய் சுதர்ஷன்
  • ‘நிதானமா இருங்க’.. மகர ராசியினருக்கான ஜூன் மாத ராசி பலன்கள்..
  • ‘காதலர்களுக்கு சிக்கல்.’.. துலாம் ராசியினருக்கான ஜூன் மாத ராசி பலன்கள்..
  • கன்னி ராசிக்காரர்களே ‘உடல்நலனில் அக்கறை தேவை..!’.. ஜூன் மாத ராசிபலன்களை தெரிஞ்சுக்கோங்க...
  • ‘யாரிடமும் ஏமாந்துறாதீங்க.’. கும்ப ராசியினருக்கான ஜூன் மாத ராசி பலன்கள்..
  •  

    377

    Tags:ADMK, Edappadi Palaniswami, General Secretary, O Pannerselvam

    முக்கிய செய்திகள்