PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / தமிழ்நாட்டில் ஆலங்கட்டி மழை... ஐஸ் மழை பொழிவுக்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டில் ஆலங்கட்டி மழை... ஐஸ் மழை பொழிவுக்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்த நிலையில், எப்படி ஐஸ் கட்டி மழையாகப் பொழிகிறது என்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.

ஆலங்கட்டி மழை

ஆலங்கட்டி மழை

மழையைக் கொடுக்கும் மேகத்தினுள் நீர்த் துளிகள் முழுமையாக இருக்கும். ஆனால், ஆலங்கட்டி மழையைத் தரும் மேகங்கள் வேறு மாதிரியாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். மேகத்தின் கீழ் பகுதியில் நீர்த் துளிகளும், மேல் பகுதியில், மைனஸ் 10 டிகிரி அளவிற்குக் குளிர்ந்த காற்றும் இருக்கும். கீழிருந்து மேலே செல்லும் வகையில், Updraft என வகைப்படுத்தப்படும் காற்று இருக்கும். மேல்நோக்கி செல்லும் காற்றின் உந்துதலால் மேகத்தின் கீழ் பகுதியில் உள்ள நீர்த் துளிகள் குளிர்ந்த காற்றுப் பகுதிக்குள் உந்தப்பட்டு, தொடர் அழுத்தம் காரணமாக ஐஸ் கட்டியாக மாறுகின்றன. அவையே மழையாகப் பொழிந்து ஆலங்கட்டி மழையாகின்றன.

ஆலங்கட்டி மழையை அதன் தன்மையைப் பொறுத்து ஆங்கிலத்தில் Hail, Sleet என வகைப்படுத்துகின்றனர். ஆலங்கட்டியின் அளவைப் பொறுத்து அதன் விளைவுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான ஆலங்கட்டி மழை பெய்ததில்லை. ஆனால், இந்தியாவின் வேறு மாநிலங்கள், உலகின் மற்ற பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

Also Read : தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை வெளுக்கப்போகுது... வானிலை அலெர்ட்..!

ஆலங்கட்டி மழை வரலாற்றிலேயே மிக மோசமானதாகச் சொல்லப்படுவது மொராதாபாத்தில் பெய்ததுதான். 1888ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் 246 பேர் உயிரிழந்தனர். 1,600 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டியும் கிரிக்கெட் பால் அளவுக்கும், ஒரு முட்டையின் அளவுக்கும் இருந்துள்ளன.

top videos
  • Chengalpattu Weather Update : செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை..
  • சுற்றுச்சூழல் மிக முக்கியம்..! நெல்லையில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்..!
  • உலக சுற்றுச்சூழல் தினம் - குந்துகால் உவர்நிலப் பகுதிகளில் அலையாத்தி செடிகள் நடவு..
  • ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் மலர்தூவி மரியாதை
  • சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கோலாகலம்..!
  • அதன் பிறகு 2010ஆம் ஆண்டில் அர்ஜெண்டினாவின் வயல் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின்போது விழுந்த ஒரு கட்டியின் எடை 4.4 கிலோ. அதுவே இதுவரை விழுந்த ஆலங்கட்டிகளில் அதிகபட்ச எடையாகக் கருதப்படுகிறது. விவசாய நிலங்களில் ஆலங்கட்டிகள் விழும்போது, பயிர்கள் கருகிப்போகும் வாய்ப்பு அதிகம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

    Tags:Chennai Rain, Rain

    முக்கிய செய்திகள்