PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை வெளுக்கப்போகுது... வானிலை அலெர்ட்..!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை வெளுக்கப்போகுது... வானிலை அலெர்ட்..!

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,

26.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க : சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!

28.03.2023 முதல் 30.03.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

377

top videos
  • Chengalpattu Weather Update : செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை..
  • சுற்றுச்சூழல் மிக முக்கியம்..! நெல்லையில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்..!
  • உலக சுற்றுச்சூழல் தினம் - குந்துகால் உவர்நிலப் பகுதிகளில் அலையாத்தி செடிகள் நடவு..
  • ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் மலர்தூவி மரியாதை
  • சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கோலாகலம்..!
  • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Tags:Rain Update, Rainfall, Tamil Nadu, Weather News in Tamil

    முக்கிய செய்திகள்