PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணங்கள் அறிவிப்பு..!

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணங்கள் அறிவிப்பு..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர்களுக்கு தனித்தனியாக கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி அருங்காட்சியகம்

கீழடி அருங்காட்சியகம்

2018ம் ஆண்டு முதல் கீழடியில் 5 கட்டங்களாக அகழாய்வு நடத்தப்பட்டது. அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை உலகத்தமிழர்கள் பார்க்கும் வகையில், சுமார் 19 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் வாழ்வியலை அறிந்துகொள்ள, நாள்தோறும் சுற்றுலா பயணிகள் கீழடிக்கு படையெடுத்து வரும் நிலையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் அமலுக்கு வருகிறது.

இதையும் படிக்க :  கீழடி அருங்காட்சியகத்தின் புகைப்படங்கள்..

அதன்படி, உள்நாட்டினர் என்றால் பெரியவருக்கு 15 ரூபாயும், சிறியவருக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 5 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

top videos
  • கன்னி ராசிக்காரர்களே ‘உடல்நலனில் அக்கறை தேவை..!’.. ஜூன் மாத ராசிபலன்களை தெரிஞ்சுக்கோங்க...
  • ‘யாரிடமும் ஏமாந்துறாதீங்க.’. கும்ப ராசியினருக்கான ஜூன் மாத ராசி பலன்கள்..
  • "விருச்சிகம் ராசிக்காரர்கள் கோபத்தை கைவிடவேண்டும்" ஜூன் மாத ராசிபலன்களை தெரிஞ்சுக்கோங்க!
  • ராமேஸ்வரத்தில் 220கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்.. 4 பேர் அதிரடி கைது!
  • ஸ்கூட்டியில் நெடுந்தூரம் பயணம் செய்து சாதனை படைத்த விருதுநகர் இளைஞர்!
  • வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளில் பெரியவருக்கு 50 ரூபாயும், சிறியவருக்கு 25 ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு 30 ரூபாயும், வீடியோ எடுப்பதற்கு 100 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.

    Tags:Keeladi

    முக்கிய செய்திகள்