PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: கோட்டை நோக்கி பேரணி செல்ல மின் வாரிய ஊழியர்கள் முடிவு

4ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: கோட்டை நோக்கி பேரணி செல்ல மின் வாரிய ஊழியர்கள் முடிவு

25 சதவீதம் ஊதிய உயர்வு கேட்ட நிலையில், 6 சதவீதம் மட்டும் தர மின் வாரியம் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியர்கள்

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மின் வாரிய ஊழியர்கள்

ஊதிய உயர்வு தொடர்பான நான்காம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், வருகின்ற 28-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி செல்ல மின் வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

25 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அவுட்-சோர்சிங் முறையில் ஆட்களை பணியமர்த்த கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மின் வாரிய ஊழியர்கள் முன்வைத்துள்ளனர். இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின் வாரிய அதிகாரிகளுடன் 19 தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

top videos
  • Chengalpattu Weather Update : செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை..
  • சுற்றுச்சூழல் மிக முக்கியம்..! நெல்லையில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்..!
  • உலக சுற்றுச்சூழல் தினம் - குந்துகால் உவர்நிலப் பகுதிகளில் அலையாத்தி செடிகள் நடவு..
  • ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் மலர்தூவி மரியாதை
  • சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கோலாகலம்..!
  • அப்போது, 25 சதவீதம் ஊதிய உயர்வு கேட்ட நிலையில், 6 சதவீதம் மட்டும் தர மின் வாரியம் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு, மின் வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 4-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. மேலும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகின்ற 28-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி செல்ல மின் வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

    Tags:TNEB

    முக்கிய செய்திகள்