PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. வானிலை அலெர்ட்..!

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. வானிலை அலெர்ட்..!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் கூடிய லேசான மழைக்குப் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

மாதிரி படம்

மாதிரி படம்

தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, மேலும் 5 நாட்களுக்குத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், இராணிப்பேட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். மார்ச் 29 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read : 6 மணி நேரத்தில் கோவை To சென்னை பயணம்.. வருகிறது வந்தே பாரத் ரயில்... முக்கிய விவரங்கள்..!

top videos
  • மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கான ஜூன் மாத ராசி பலன்கள்.. முழு விவரம்
  • ரிஷபம் ராசிக்காரர்களே.. ஏற்றமும் இறக்கமும் நிறைந்த ஜூன் மாத ராசிபலன்..
  • சங்கர நாராயணசாமி சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய பெண்கள்
  • மேஷம், ரிஷபம் மிதுனம் ராசிக்காரர்களே.. ஜூன் மாத ராசி பலன் தெரிஞ்சுக்கோங்க..
  • கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான ஜூன் மாத ராசி பலன்..!
  • சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளனர்.

    Tags:Rain, Rain Update, Rain updates

    முக்கிய செய்திகள்