PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

கொரோனா

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்தது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு இரண்டு ஆண்டுகள் மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தான் கொரோனா பாதிப்பு இல்லாமல் இயல்பு நிலை நீடித்துவருகிறது.

இந்தநிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்லமாக அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,199 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 99 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 35,96,209 பேராக அதிகரித்துள்ளது.

top videos
  • Chengalpattu Weather Update : செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை..
  • சுற்றுச்சூழல் மிக முக்கியம்..! நெல்லையில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்..!
  • உலக சுற்றுச்சூழல் தினம் - குந்துகால் உவர்நிலப் பகுதிகளில் அலையாத்தி செடிகள் நடவு..
  • ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் மலர்தூவி மரியாதை
  • சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கோலாகலம்..!
  • இன்று மட்டும் சென்னையில் 26 பேருக்கும், செங்கல்பட்டில் 15 பேருக்கும், கோயம்புத்தூரில் 21 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 73 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    Tags:Corona

    முக்கிய செய்திகள்