PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு அரசு!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு அரசு!

சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆன்லைன் விளையாட்டு

ஆன்லைன் விளையாட்டு

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டதால், அதற்கு தடைவிதிக்கக் கோரி கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • ஆனால், இந்த மசோதாவை இயற்ற, தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6ஆம் தேதி, சட்ட மசோதாவை அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். ஆளுநர் ஆர்.என்.ரவியால், திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் வியாழக்கிழமை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டு, அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 8 பக்கங்கள் கொண்ட இந்த சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    Tags:Online rummy, Tamil Nadu Governor

    முக்கிய செய்திகள்