PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / கூட்டுறவு வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ்.. ஆன்லைன் பரிவர்த்தனை வசதி அறிமுகம்!

கூட்டுறவு வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ்.. ஆன்லைன் பரிவர்த்தனை வசதி அறிமுகம்!

Online transaction | கடந்த ஓராண்டாக எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆன்லைன் பரிவர்த்தனை

ஆன்லைன் பரிவர்த்தனை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் விரைவில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த  “ஓராண்டாக எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி, அதன் 54 கிளைகள் மற்றும் அனைத்து 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அதன் 922 கிளைகள்  என அனைத்திலும் IMPS (Instant Money Payment System) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனைத்து தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய லுக்கில் சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!

top videos
  • சென்னை வந்த அமித்ஷா - சாலையில் திடீரென விளக்குகள் அணைந்ததால் பரபரப்பு
  • பாதங்களை தொட்டு வணங்க கடமைப்பட்டிருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்
  • பாஜக தமிழ்நாட்டுக்கு என்ன கொடுத்தது தெரியுமா? பட்டியலிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின்
  • இயற்கை பொருட்களை கொண்டு 15 அடி நீளத்தில் மீன் பொம்மை.. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முயற்சி!
  • கோவை மக்களே பள்ளி உபகரணங்கள் வாங்கனுமா? இங்க வாங்க எல்லாமே கிடைக்கும்!
  • மேலும், இன்னும் இரண்டு வாரங்களில் இவை அனைத்திலும் UPI (Unified Payment Interface) வசதியும் கொண்டுவரப்படும். இதன்மூலம் Google Pay, PayTM, BHIM உள்ளிட்ட அனைத்து பணமற்ற பரிவர்த்தனை வசதிகளும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Tags:Bank, Online Transaction, UPI

    முக்கிய செய்திகள்