PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் எனக் கூறி இளங்கோவன் கடந்த மார்ச் 22அம் தேதி வீடியோ வெளியிட்டிருந்தார்.

ஈவிகேஎஸ்.இளங்கோவன்

ஈவிகேஎஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்ததை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாகச் சென்னை அடுத்த போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இதய ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதையும் படிக்க : சுகாதார பணியாளர்களுக்கு இலவசமாக இன்புளூயன்சா தடுப்பூசி.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!

இதையடுத்து விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் எனக் கூறி இளங்கோவன் கடந்த மார்ச் 22அம் தேதி வீடியோ வெளியிட்டார். அதில், “நான் நலமுடன் இருக்கிறேன். இரு நாள்களில் வீடு திரும்புவேன்” என்று அவர் பேசியிருந்தார். மேலும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

top videos
  • Chengalpattu Weather Update : செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை..
  • சுற்றுச்சூழல் மிக முக்கியம்..! நெல்லையில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்..!
  • உலக சுற்றுச்சூழல் தினம் - குந்துகால் உவர்நிலப் பகுதிகளில் அலையாத்தி செடிகள் நடவு..
  • ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடலில் மலர்தூவி மரியாதை
  • சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கோலாகலம்..!
  • இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வந்துள்ளது. கொரோனாவில் குணமடைந்து வருவதாக மருத்துவமனை தெரிவித்த நிலையில் மீண்டும் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Tags:EVKS Elangovan

    முக்கிய செய்திகள்