ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, சென்னை வளசரவாக்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் தூக்கு போடும் போராட்டம் நடத்தினர். வாயில் கருப்பு துணி கட்டி, கழுத்தில் தூக்கு கயிறுடன் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை பூந்தமல்லியில் பிரதமர் மோடி புகைப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தமல்லி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
சண்டிகரில் இளைஞர் காங்கிரஸார் டெல்லி-சண்டிகர் சதாப்தி ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் சந்திப்பில் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிக்கூண்டு அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து அவர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி, தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணி எம்.எல்ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மாநில சட்டமன்ற வளாகத்தின் வெளியே வாயில் கருப்பு பட்டை கட்டியபடி, அவர்கள் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தியின் எம்.பி.பதவி தகுதிநீக்கத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பூந்தமல்லியில் பிரதமர் மோடி புகைப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் சந்திப்பில் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Rahul Gandhi, Tamil Nadu