PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

EVKS Elangovan: தமிழ்நாட்டில் ஊரடங்கு போட வேண்டிய நிலை இல்லை என்றும், தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்

காட்சிப் படம்

காட்சிப் படம்

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஒமிக்ரான் ரகத்தில் XBB வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை சோதித்ததில், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் ஏற்கெனவே H3N2 வகை வைரஸ் பாதிப்பு இருந்ததாக தெரிவித்தார். காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதால், H3N2 வைரஸ் காய்ச்சல் தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்திருப்பதாக அமைச்சர் கூறினார். மேலும், தற்போது பரவி வரும் XBB வகை தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் பாதித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்க: தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று - இன்றைய பாதிப்பு நிலவரம் இதோ!

மேலும், தமிழ்நாட்டில் ஊரடங்கு போட வேண்டிய நிலை இல்லை என்றும், தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அத்துடன், சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்புளுயென்சா காய்ச்சலுக்கான தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்

Tags:Corona, Covid-19, Omicron

முக்கிய செய்திகள்