PREVNEXT
முகப்பு / செய்தி / தமிழ்நாடு / 'மாறிவிட்டது அரசியல்களம்.. கூண்டு கிளி அல்ல.. பறக்கத் தயாராகிவிட்டது பாஜக': அண்ணாமலை பேச்சு

'மாறிவிட்டது அரசியல்களம்.. கூண்டு கிளி அல்ல.. பறக்கத் தயாராகிவிட்டது பாஜக': அண்ணாமலை பேச்சு

BJP Tamilnadu Leader Annamalai | பாஜக என்ற கிளி கூண்டை உடைத்து பறக்க தயாராகிவிட்டது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

அண்ணாமலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் அரசியல் களம் மாறிவிட்டது என்றார். தமிழ்நாட்டில் புரட்சிக்கான நேரம் இது எனக்கூறிய அவர், பாஜக நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கும் நிலை வந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், பாஜகவின் பாதை தனிப்பாதையாக, சிங்கப்பாதையாக இருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை சூளுரைத்தார்.

வட கிழக்கு மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். மணிப்பூர் மேகாலயா திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி. கோவாவில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள் அங்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி. கிறிஸ்தவர்களும் பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுக் கொண்டுள்ளனர். எல்லா இடத்தில களம் மாறிவிட்டது. கூண்டுக்குள் இருக்கும் கிளியை போன்று இல்லாமல் கூண்டை விட்டு வெளியே பறக்கும் கிளியாக பாரதிய ஜனதா தமிழகத்தில் மாறி இருக்கிறது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல்.. திமுகவுக்கு சாதகமாக அமையாது - சசிகலா கருத்து

கூண்டை உடைத்து விட்டு வெளியே பறப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தயாராகி விட்டது. தமிழகத்திலும் அரசியல் களம் மாறிவிட்டது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியலை போன்று நடந்தால் தமிழகம் பின்னோக்கி செல்லும். திமுக அமைச்சர்கள் கண் முன்னாள் கொள்ளையடித்து கொண்டு உள்ளனர் என அண்ணாமலை குற்றச்சாட்டினார்.

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  •  

    Tags:Annamalai, Kovilpatti

    முக்கிய செய்திகள்