ராமநாதபுரம் அருகே செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை உடைத்து விழுந்ததில் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் உயிர் தப்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளி,கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது கட்டிடம். இன்று காலையில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருந்த போது பள்ளியின் வெளிப்புற முகப்பு பகுதியில் காரைகள் பெயர்ந்து கீழே விழுந்தது.
ரூ.15,000 சம்பளம் : ராமநாதபுரத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணி - தகுதிகள் என்ன?
ராமநாதபுரம் | மாவட்ட அளவிலான செஸ் போட்டி; 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
பரமக்குடி : வேந்தோணி கிராமத்தில் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
ராமநாதபுரம் | தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம் கலைநிகழ்ச்சிகளுடன் வெகுவிமரிசையாக நடைபெற்ற குடியரசு தின விழா
ராமநாதபுரம் | கருகிய பயிருடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக தடுப்புகள்- போராட்டத்தில் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சி
ராமநாதபுரம் மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு கடலோர காவல்படை இலவச பயிற்சி - விண்ணப்பித்து பயன் பெறுங்கள்
ராமநாதபுரம் | பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட்ட காவல்துறை- ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள்
74-வது குடியரசு தினம்- பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு
தடையை மீறி கச்சத்தீவில் கொடியேற்ற முயன்ற இந்து அமைப்பு- கைது செய்த காவல்துறை
மேலும் பள்ளியின் நான்கு புறங்களிலும் உள்புற பகுதிகளிலும் கட்டிடங்கள் விரிசலுடன் சிதலமடைந்துள்ளதால்எந்நேரமும் இடிந்து விளக்கூடும் என்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் இருக்கவும் கல்வி பயிலவும் அச்சமடைந்துள்ளனர்.
சேதமடைந்து இடியும் நிலையில் உள்ள தரமற்ற அரசு பள்ளி கட்டிடத்தினை அகற்றி விட்டு மாணவர்களுக்கு புதிய கட்டிடம் அமைத்து எந்தவொரு ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதி மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Government school, Local News, Ramanathapuram, Ramnad, School students