PREVNEXT
முகப்பு / செய்தி / புதுச்சேரி / புதுச்சேரி அருகே தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்படும் அரசு தொடக்கப்பள்ளி - சிறப்புகள் என்ன?

புதுச்சேரி அருகே தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்படும் அரசு தொடக்கப்பள்ளி - சிறப்புகள் என்ன?

Puducherry News | புதுச்சேரி அடுத்த முதலியார் குப்பத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி 6 முறை அரசு விருதை பெற்றுள்ளது.

புதுச்சேரி அடுத்த முதலியார் குப்பத்தில் அரசு பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பகுதியில் சிறந்து விளங்கும் இந்த பள்ளி 1956ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பான சேவைகளை செய்து வருகின்றனர்.

தற்போது எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு படங்கள், நடனம் , பாடல் காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறன. மேலும், எந்த அரசு பள்ளியிலும் இல்லாத அளவிற்கு தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர்கள் பெற்றோர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டு அன்றாட பாடங்கள் குறித்து வாட்ஸ்அப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், இந்த பள்ளி சிறந்து விளங்குவதற்கான 6 முறை தமிழ்நாடு அரசின் விருதுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தப் பள்ளியை மேம்படுத்தும் வகையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மேலாண்மை குழு மூலம் பாண்டி ஷைன் தொண்டு நிறுவனத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி பள்ளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பாண்டி ஷைன் தொண்டு நிறுவனம் செய்து கொடுத்துள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து (புதுச்சேரி)

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த புதுவை வம்புபட்டு முத்துமாரியம்மன்!

சொரப்பூர் ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..!

புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!

புதுச்சேரி பாங்கொளத்தூர் பச்சைவாழி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்!

தாம்பூல பையில் மதுபாட்டில்.. புதுச்சேரி திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அதிர்ச்சி!

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா..! தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான் வீதி உலா..!

புதுச்சேரியில் உலக மக்கள் நன்மை வேண்டி ஜப்பான் நாட்டவர்கள் சிறப்பு யாகம்!

புதுச்சேரி ரேணுகாம்பாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்!

புகையிலையால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது? - பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுவை கல்லூரி மாணவர்கள்..

நடிகர் ஆர்யாவின் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படம் எப்படி இருக்கு? புதுச்சேரி ரசிகர்கள் கருத்து!

புதுச்சேரி திருக்காமேஸ்வரர் கோயில் தேரோட்ட வைபவம்.. பக்தி கோஷமிட்ட பக்தர்கள்!

இதையும் படிங்க : ஊட்டிக்கு இனி சிரமமின்றி போகலாம்.. சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்! 

குறிப்பாக மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி மற்றும் கிரீன் போர்டு வசதி செய்து கொடுத்ததுடன் குடிநீர் வசதியையும் தொடங்கி வைத்தனர். மேலும், பாடல் மற்றும் எழுத்து மூலம் பயிற்சி அளிப்பதற்கான எழுதுபொருள் உள்ளிட்ட வசதிகள் இந்த தொண்டு நிறுவனம் செய்து கொடுத்துள்ளது. முதலியார்குப்பம் அரசு பள்ளியில் படிக்கும் 200- மாணவ மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் கலந்துகொண்ட வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் அஞ்சலாதேவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் லதா மற்றும் நிறுவனத்தின் பவுண்டர் சுதாகர் மற்றும் ஜெரால்ட், அரவிந்த், ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்களை வழங்கினார். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் யோகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு விளையாட்டு போட்டிகள் என விழா சிறப்பாக நடைபெற்றது.

377

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • இதில் முதலியார் குப்பத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பெற்றோர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர் மேலும், அரசு பள்ளிகளுக்கு உதவிகள் தேவைப்படுவோர் தங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தாராளமாக உதவி செய்ய தான் தயாராக இருப்பதாகவும் தன்னார்வலர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

    Tags:Local News, Puducherry

    முக்கிய செய்திகள்