புதுச்சேரியில் ஆயிகுளத்தை உருவாக்கி தண்ணீர் சேமிக்க வழிவகை செய்த ஆயி அம்மையாரை பற்றி தெரிந்து கொள்வோம்.
கிருஷ்ணதேவராயர் :
விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் உய்யக்கொண்ட முதலியார் என்ற பிரபுவை சந்திப்பதற்காக உழவர்கரை வழியாக சென்று கொண்டிருந்தார். அவ்வாறு அவர் செல்லும் வழியில் நன்கு பராமரிக்கப்பட்ட அதிக வெளிச்சம் கொண்ட ஒரு மாளிகையை கடக்க நேர்ந்தது. அதை அவர் ஒரு கோவில் என்று கருதி அதன் முன் நின்று வணங்கினார். அப்போது இது கோவில் அல்ல உள்ளூர் தேவதாசி வீடு என்பது அவருக்கு தெரியவந்தது.
3 இடங்களில் 3 வேளையும் உணவு.. புதுச்சேரியில் நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாட்டம்..
திருநள்ளாறு கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா..!
கழுவேத்தி மூர்க்கன் படம் எப்படி இருக்கு? - புதுவை மக்கள் கருத்து..
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளிடம் இதை பண்ணாதீங்க..! புதுவை பேராசிரியர் சொன்ன ஷாக் தகவல்..!
தவளக்குப்பம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா.. திரளான பக்தர்கள் தரிசனம்..
தரமற்ற முறையில் புதுச்சேரி - கடலூர் சாலை.. அலட்சியம் காட்டிய அதிகாரிகளால் பொதுமக்கள் அதிர்ச்சி..
தாய் கிருஸ்துவர், தந்தை இந்து... அல்ஜீரியா இஸ்லாமிய பெண்ணை வள்ளலார் முறைப்படி கரம் பிடித்த இளைஞர்..
8 வயதில் விபத்தில் கால் இழப்பு... நம்பிக்கையுடன் பெட்ரோல் பங்கில் வேலை... குழந்தைகள் படிப்புக்காக ஏங்கும் மாற்றுத்திறனாளி
புதுச்சேரியில் பாதாள சாக்கடை பணி தீவிரம்.. இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை!
புதுச்சேரியில் சித்தர்களை நோக்கி சிவனடியார்கள் பயணம்..
சூடுபிடிக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டி... பிரியாணியால் தோனி உருவம் வரைந்து அசத்திய புதுச்சேரி ஓவியர்!
இதனால் வெளிப்படையான அவமானத்தால் கோபத்தின் உச்சிக்கே சென்ற கிருஷ்ணதேவராயர் இந்த தாசியின் வீட்டை இடிக்க உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தான் செய்ததற்கு பரிகாரமாக அந்த வீடு இருந்த இடத்தில் ஒரு கிணற்றையும் குளத்தையும் வெட்டச் சொன்னாராம். அப்போது, மாளிகையில் உள்ளே இருந்த தாசி நடந்ததை அறிந்து மாளிகையை தன் செலவிலேயே இடித்து அந்த இடத்தில் கிணறும், குளமும் அமைத்துக் கொள்ள அனுமதி பெற்று, அதனை திறம்பட செய்து முடித்தார்.
நினைவு சின்னம் :
இதனையடுத்து புதுவையை ஆண்ட பிரெஞ்சுக்காரர்கள் ஆயி அம்மையாரின் நினைவாக ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பினார். அதன்படி புதுச்சேரி ஆயிக்குளம் என்பது நிலத்தடி நீரை நிரப்பும் பணியை மட்டும் செய்யும் குளமாக மட்டும் இல்லாமல், இது பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று சுவடாகவும் இருந்து வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை சார்பாக ஆயிக்குளத்தை உருவாக்கிய ஆயி அம்மையாரின் நினைவாக, பாரதி பூங்காவில் உள்ள ஆயி நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஆயி அம்மையாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அரசியல் கட்சியினர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Local News, Puducherry