PREVNEXT
முகப்பு / செய்தி / புதுச்சேரி / புதுச்சேரி ஒலக்கூர் அகத்தீஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

புதுச்சேரி ஒலக்கூர் அகத்தீஸ்வரர் கோவிலில் 108 கலசாபிஷேகம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

Puducherry News : புதுச்சேரி அடுத்த ஒலக்கூர் கிராமம் ஸ்ரீகாமாட்சி அம்மாள் சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவை முன்னிட்டு 108 கலசாபிஷேகம் நடைபெற்றது. 

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான ஒலக்கூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழாவை கடந்த 3ம் தேதி நடைபெற்றது. அப்போது, அகத்தீஸ்வரர் மற்றும் பரிவார விமானங்கள் மகா கும்பாபிஷேகமும், மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து காமாட்சியம்மாள், அகத்தீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து கோவிலில் மூலவருக்கு 48 நாட்களும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. மண்டல அபிஷேக நிறைவு நாளில் கோவில் வளாகத்தில் யாக சாலை வேள்வியும், யாகசாலையில் 108 கலசங்கள் பூஜை செய்யப்பட்டது. பூஜிக்கப்பட்ட 108 கலசங்களும் கோவில் உட்பிரகாரம் வலம் வந்ததை தொடர்ந்து மூலவருக்கு 108 கலசாபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவில் உட்பிரகாரம் பலம் வரும் காட்சியும், வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து (புதுச்சேரி)

திருநள்ளாறு கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா..!

கழுவேத்தி மூர்க்கன் படம் எப்படி இருக்கு? - புதுவை மக்கள் கருத்து..

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளிடம் இதை பண்ணாதீங்க..! புதுவை பேராசிரியர் சொன்ன ஷாக் தகவல்..!

சூடுபிடிக்கும் ஐபிஎல் இறுதிப்போட்டி... பிரியாணியால் தோனி உருவம் வரைந்து அசத்திய புதுச்சேரி ஓவியர்!

புதுச்சேரியில் சித்தர்களை நோக்கி சிவனடியார்கள் பயணம்..

தாய் கிருஸ்துவர், தந்தை இந்து... அல்ஜீரியா இஸ்லாமிய பெண்ணை வள்ளலார் முறைப்படி கரம் பிடித்த இளைஞர்..

3 இடங்களில் 3 வேளையும் உணவு.. புதுச்சேரியில் நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாட்டம்..

தவளக்குப்பம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா.. திரளான பக்தர்கள் தரிசனம்..

புதுச்சேரியில் பாதாள சாக்கடை பணி தீவிரம்.. இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை!

8 வயதில் விபத்தில் கால் இழப்பு... நம்பிக்கையுடன் பெட்ரோல் பங்கில் வேலை... குழந்தைகள் படிப்புக்காக ஏங்கும் மாற்றுத்திறனாளி

தரமற்ற முறையில் புதுச்சேரி - கடலூர் சாலை.. அலட்சியம் காட்டிய அதிகாரிகளால் பொதுமக்கள் அதிர்ச்சி..

Tags:Local News, Puducherry

முக்கிய செய்திகள்