மாவட்டத்தில், திருக்கோவிலூர் நகரில் உலகளந்த பெருமாள் கோவில் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்த கோவிலின் பெருமாள் திருவுருவம் ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார். கோபுர நுழைவாயில்கள் கோவிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக அமைந்துள்ளது.
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரோடும் திருமங்கை ஆழ்வாரும் இந்தத் தலத்தை மங்களா சாசனம் செய்திருக்கிறார். கோயில் அமைந்துள்ள இந்த திருக்கோயிலூர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமானது பதினொரு நிலைகளோடு உயர்ந்திருக்கிறது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மங்கை மன்னன் (திருமங்கை ஆழ்வார்) கட்டிய கோபுர வாயில் வரும்.
அதனையும் கடந்தால் பாண்டியன் மண்டபம் வரும், அதன் பின்புதான் கருவறை உள்ளது. கருவறையில் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறார் உலகளந்த திருவிக்கிரமன். நல்ல நெடிய திருவுருவம். இது மரத்தால் ஆன வடிவம் என்று சொல்லப்படுகிறது.
இந்த திருக்கோவிலூரில் உள்ள திருமால் பிற கோயில்களில் இருந்து மாறுபட்டு வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். திருவிக்கிரமன் பத்தினி (திருவிக்கிரமி) மிருகண்டு, மகாபலி எல்லோரும் காலடியிலேயே இருக்கிறார்கள்.
விஜயநகரப் பேரரசு மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலின் முதல் பிராகாரத்தின் முகப்பிலே துர்க்காம்பாள் விக்கிரமன் ஆணையின் பேரில், கோவிலுக்கு அவள் காவல் நிற்பதாகக் கூறுவர். துர்க்கை சிலை அநேகமாக விஷ்ணு கோயில்களிலே காண்பது இல்லை.
இந்த கோவிலில் லக்ஷ்மிநாராயணன், லக்ஷ்மிவராஹன், லக்ஷ்மி நரசிம்மன் மூவருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன. மேலும், ராமர், உடையவர், திருக்கச்சி நம்பி, ஆண்டாள், மணவாள மாமுனிகளின் சந்நிதிகளும் தனித் தனியே இருக்கின்றன.
இந்த உலகளந்த பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தொழில், காதல், திருமணம், குழந்தை பேரு, செல்வம் பெருக, எதிரிகள் ஒழிய, நிம்மதி மற்றும் உடல் நலம் வேண்டிய வழிபடுகின்றனர்.