ஹோம் » போடோகல்லெரி » Thoothukudi
PREVNEXT
News18 Tamil | July 01, 2022, 08:13 IST

தூத்துக்குடியில் நடந்த கடல் சாகச விளையாட்டுப் போட்டி.. பதக்கங்களை தட்டிச் சென்ற வீரர்கள்

Thoothukudi | தூத்துக்குடி கடலில் முதன்முறையாக நடந்த Kiteboarding கடல் சாகச விளையாட்டுப் போட்டியில் மும்பை, கோவா, தூத்துக்குடி வீரர்கள் பதக்கத்தை தட்டிச் சென்றனர். செய்தியாளார்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி

 ஒலிம்பிக்கில் வரும் 2024 ஆம் ஆண்டு  Kiteboarding என்ற கடல் விளையாட்டு சேர்க்கப்படவுள்ளது. இந்த விளையாட்டை இந்திய அளவில் பிரபல படுத்துவதற்காகவும், நமது நாட்டு இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும்  மாவட்டத்தில் அதிக அளவு காற்று வீசக்கூடிய இடமான வேப்பலோடை கடல் பகுதியில் தேசிய அளவிலான kiteboarding என்ற  போட்டி நடைபெற்றது.
1/ 5

2/ 5

இந்தப் போட்டியில் கர்நாடகா, கோவா, மும்பை  ஆந்திரா, தமிழ்நாடு  உள்ளிட்ட மாநிலங்களில்  இருந்து  ஆண்கள், பெண்கள் என மொத்தம் 15 பேர் கலந்து கொண்டனர். இவர்கள். கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தூரம் காற்றோட்டத்திற்கு ஏற்றபடி பாராசூட் போன்ற காத்தாடியை செலுத்தி கடலில்  இலக்கை நோக்கி பயணித்தனர்.

3/ 5

மூன்று தினங்களில் மொத்தம் 12 போட்டி (12 ரேஸ்)  நடந்து.  இந்த போட்டியில் கிரேட் அடிப்படையில் முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்பட்டு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

4/ 5

ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை மும்பையை  சேர்ந்த டைலனும், இரண்டாவது இடத்தை தூத்துக்குடியை சேர்ந்த அர்ஜூன் மோத்தாவும் தட்டிச்சென்றார். பெண்கள் பிரிவில் முதல் இடத்தை கோவாவை சேர்ந்த காட்டியாஷைனியும், இரண்டாவது இடத்தை கோவாவை சேர்ந்த கெனோ ராஜாநியும் தட்டிச் சென்றனர்.

5/ 5

இந்த போட்டியில் தேர்வானவர்கள் தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் அதனை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by: Vaijayanthi S
First published: July 01, 2022, 08:13 IST

அண்மைச்செய்தி

    Top Stories