பெண்கள் உடலுறவுக்குப் பின் சில சுகாதார விஷயங்களைக் கையாளுவது அவசியம். இல்லையெனில் அதனால் ஏற்படும் தொற்றுகளால் பக்கவிளைவுகளை சந்திக்கலாம். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது என்பதற்கு ஏற்ப இந்த சுகாதார விஷயங்களை கையாளுங்கள். சிறுநீர் கழிக்கத் தவறாதீர்கள் : உடலுறவு கொண்டபின் சிறுநீர் கழிப்பது நல்லது. ஏனெனில் ஏதேனும் தொற்றுகள் இருந்தாலும் சிறுநீர் மூலம் அவை வெளியேறிவிடலாம். இதனால் ஆபத்துகளை குறைக்கலாம். வெஜினா சுத்தம் : பின் வெஜினாவை சுத்தம் செய்வதற்கு மறவாதீர்கள். இதற்கு சோப்பு போன்ற கெமிக்கல்களை பயன்படுத்தாமல் தண்ணீர் கொண்டே கழுவலாம். கரடுமுரடாக இல்லாமல் மென்மையாகக் கழுவுங்கள். இதனால் சிறு கீரல் பட்டாலும் தொற்று ஏற்படலாம். முடிந்தவரை குளித்துவிடுவதும் நல்லது. காற்றோட்டம் : கழுவிய பின் பருத்தி துணி கொண்டு ஈரத்தை துடைத்து எடுங்கள். அப்படியே விட்டால் பூஞ்சைகள் உருவாகலாம். இதனால் அரிப்பு, தொற்று ஏற்படலாம். உள்ளாடையை மாற்றுங்கள் : அடுத்ததாக அதே உள்ளாடைகளை அணியாமல் புதிதாக துவைத்து வைத்துள்ளதை பயன்படுத்துங்கள். பருத்தி துணியில் கொண்ட உள்ளாடைகளை அணிவது நல்லது.