அக்கா, தங்கையுடன் பிறந்த ஆண்கள் வீட்டில் பெண் குழந்தைகளுக்குத்தான் சில சௌகரியங்கள் கிடைக்கும். அது, ஆண்களாக பிறந்த அண்ணன் , தம்பிகளின் வாழ்க்கையை எப்படி பந்தாடுகிறது என்று பார்க்கலாம். உங்களுக்கு அம்மா ஒருவர் என்றாலும் அக்கா இருந்தால் இரண்டு அம்மாக்கள். அதை போகப் போக உணர்வீர்கள். உங்களுக்கு பாத்ரூமில் எப்போதும் முன்னுரிமை கிடைக்காது. ஷெல்ஃப், பீரோ என எங்கு திறந்தாலும் காஸ்மெட்டிக் பொருட்கள், அவர்களுக்கே அதிக உடைகள் என இருக்கும். அவர்களுடைய ஃபேஸ்புக் , இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகியவற்றில் டிபி ஃபோட்டோ கிரெடிட் உங்களுக்கே சேரும். அதுவும் ஃபோட்டோஷாப் தெரிந்த சகோதரராக இருந்தால், கொஞ்சம் சிரமம் தான். அவர்களுக்கு போரடித்தால் உங்களுக்கு மேக்அப் செய்து பெண் போல் வேடமிட்டு ஃபோட்டோ எடுப்பார்கள். அந்த ரகசிய ஃபோட்டோ சகோதரியிடம் மாட்டிக்கொள்ளும். அப்படி உங்கள் ரகசியம் நிறைந்த, யாருக்கும் நீங்கள் காட்ட விரும்பாத பல ஃபோட்டோக்கள் உங்கள் சகோதரியிடம் சிக்கியிருக்கும். சகோதரியின் ஆடையை அவ்வப்போது ஐயர்ன் செய்து தரச் சொல்லும் சிக்கல்கள் நேரும். அதற்காக பல டிப்ஸ்களையும் வாங்கியிருப்பீர்கள். உங்கள் டீ ஷர்ட்ஸ் மற்றும் ஷர்ட்டுகள் உங்கள் சகோதரியால் களவாடப்பட்டிருக்கும். பாவம் உங்களால் அதைத் திரும்பச் செய்யமுடியாது. அவர்கள் புதிதாக, மேக்அப், ஹேர் கேர் டிப்ஸ், ஸ்கின் கேர் டிப்ஸ் கற்றுக் கொண்டிருந்தால் அதற்கு பரிசோதனை எலி நீங்கள்தான். அவ்வபோது, WWF - ல் பார்த்த புதிய சண்டைகளை உங்கள் சகோதரியை அடித்து எல்லாவற்றிற்கும் பழி தீர்த்துக் கொள்வீர்கள். உங்கள் காதலிக்கோ தோழிக்கோ கிஃப்ட் வழங்குவதில் பிரச்னையே இருக்காது. அதான் உங்கள் சகோதரி இருக்கிறார்களே!