ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல்
PREVNEXT
News18 Tamil | August 09, 2022, 12:14 IST

உங்கள் குழந்தைக்கு உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம் என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்..!

ஒரு குறுநடை போடும் சிறு குழந்தை அல்லது சற்று வளர்ந்த குழந்தை நோயால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெற்றோருக்கு குறிப்பாக முதல் முறையாக பெற்றோராகி இருப்போருக்கு கவலை அளிக்கிறது.

 ஒரு பெற்றோராக உங்கள் பிள்ளையை நீங்கள் எப்போதும் கவனித்து கொள்ள வேண்டும் மற்றும் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். தற்செயலாக அவர்கள் தங்களை தாங்களே காயப்படுத்தி கொள்ளலாம் அல்லது திடீரென நோய்வாய்ப்படலாம். ஒரு குறுநடை போடும் சிறு குழந்தை அல்லது சற்று வளர்ந்த குழந்தை நோயால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெற்றோருக்கு குறிப்பாக முதல் முறையாக பெற்றோராகி இருப்போருக்கு கவலை அளிக்கிறது. உங்கள் குழந்தைக்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும் மற்றும் அலட்சியம் காட்டக்கூடாத சில அறிகுறிகளை பற்றி இங்கே பார்க்கலாம்...
1/ 11

ஒரு பெற்றோராக உங்கள் பிள்ளையை நீங்கள் எப்போதும் கவனித்து கொள்ள வேண்டும் மற்றும் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். தற்செயலாக அவர்கள் தங்களை தாங்களே காயப்படுத்தி கொள்ளலாம் அல்லது திடீரென நோய்வாய்ப்படலாம். ஒரு குறுநடை போடும் சிறு குழந்தை அல்லது சற்று வளர்ந்த குழந்தை நோயால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெற்றோருக்கு குறிப்பாக முதல் முறையாக பெற்றோராகி இருப்போருக்கு கவலை அளிக்கிறது. உங்கள் குழந்தைக்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும் மற்றும் அலட்சியம் காட்டக்கூடாத சில அறிகுறிகளை பற்றி இங்கே பார்க்கலாம்...

2/ 11

காய்ச்சல்: குழந்தையின் உடல் வெப்பநிலை சிறிதளவு மட்டுமே உயர்ந்து லேசான காய்ச்சல் தான் அடிக்கிறது என்றால் உங்களால் வீட்டிலேயே நிர்வகிக்க முடியும். எனினும் சில நேரங்களை லேசான காய்ச்சல் கூட தீவிர தொற்றின் ஆரம்பமாக இருக்கலாம். எனவே காய்ச்சலின் வீரியத்தை பொருட்படுத்தாமல் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது எப்போதுமே நல்லது.

3/ 11

அழுவது அல்லது சாப்பிட மறுப்பது: குழந்தைகள் பெரும்பாலும் அழுவதன் மூலம் அல்லது பெரும்பாலும் சாப்பிடாமல் அடம்பிடிப்பதன் மூலம் அமைதியின்மையை எதிர்கொள்கின்றனர். உங்கள் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாலோ அல்லது சாப்பிட மறுத்தாலோ உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

4/ 11

திடீரென சுறுசுறுப்பற்று இருப்பது.. பொதுவாக குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுறுசுறுப்பாக இருந்த உங்கள் குழந்தை திடீரென்று அமைதியாக இருந்தால் அதை புறக்கணிக்காதீர்கள். குழந்தைக்கு உடல் ரீதியாக சில அசௌகரியங்கள் இருக்க கூடும். எனவே அவர்களிடம் சென்று உடல்நிலையில் ஏதாவது பிரச்னையா என்று கேட்டு அதற்கேற்ப மருத்துவ உதவியை ஏற்பாடு செய்வது அவசியம்.

5/ 11

தொடர் வாந்தி: குழந்தை தொடர்ந்து வாந்தி எடுத்தப்படி இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். அதிக நேரம் எடுத்து கொள்ள கூடாது. குழந்தை மீண்டும் மீண்டும் வாந்தி எடுப்பதை ஒருபோதும் புறக்கணிக்க கூடாது. இது நீரிழப்புக்கு வழிவகுக்கும் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தாக மாறும்.

6/ 11

வயிற்று வலி: எனக்கு வயிறு வலிக்கிறது என்று உங்கள் குழந்தை சொன்னால் விளையாட்டாக சொல்கிறது என்றெண்ணி ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க அலல்து வேறு காரணங்களுக்காக வயிறு வலி என்று சொன்னாலும், சொல்லும் விதம் பிரச்சனையாக இருக்க கூடும் என்ற சந்தேகம் உங்களுக்கு வருகிறது என்றால் உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

7/ 11

தனிமை.. குழந்தைக்கு உடல் ரீதியாக மட்டுமல்ல மன ரீதியாகவும் பிரச்சனைகள் இருக்கலாம். உங்கள் குழந்தை அடிக்கடி தனிமையில் இருப்பதை விரும்புவதாக நீங்கள் உணர்கிறீர்களா..? அனைவரிடமும் கலகலப்பாக பேசி விளையாண்ட குழந்தை, யாரிடமும் பேசாமல தனிமையை விரும்பினால் அது மிகவும் தீவிரமான ஒன்று. உடனடியாக நிபுணரை அணுகவும்.

8/ 11

திடீர் எடை அதிகரிப்பு அல்லது இழப்பு: குழந்தைகளுக்கு அடிக்கடி எடை குறைவது அல்லது அதிகரிப்பது பொதுவான ஒன்று. ஆனால் உடல் எடை திடீரென்று ஒரேடியாக ஏறுவது அல்லது குறைவது போன்ற கடுமையான மாற்றம் ஒரு தீவிர மருத்துவ நிலைக்கான அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே உடனடியாக நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது.

9/ 11

சுவாச பிரச்சனைகள்.. குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் உங்கள் பிள்ளை சிறு சிறு செயல்களை செய்யும் போது கூட மூச்சுத்திணறல் மற்றும் மூச்சிரைக்கும் பிரச்சனையை எதிர்கொண்டால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி பரிந்துரைகளை பெற வேண்டும்.

10/ 11

ஸ்கின் ரேஷஸ்: குழந்தைகளுக்கு ஏற்படும் ஸ்கின் ரேஷஸ்கள் அலர்ஜி மற்றும்சுகாதார பிரச்சனைகளால் ஏற்படுகிறது. ஸ்கின் ரேஷஸ்கள் மற்றொரு நோய்க்கு வழிவகுக்கலாம் என்பதால் துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை அளிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

11/ 11

ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதான ஆர்வம்.. குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை வெறுக்கிறார்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை விரும்புகிறார்கள் என்பது உலகளாவிய உண்மை. ஆனால் உங்கள் குழந்தை ஆரோக்கியமற்ற விஷயங்களில் இயல்பை விட அதிக விருப்பம் கொண்டிருந்தால் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள ஒரு மருத்துவரிடம் கூட்டி செல்வது அவசியம்.

Published by: Sivaranjani E
First published: August 09, 2022, 12:14 IST

அண்மைச்செய்தி

    Top Stories