பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தற்போது முக்கிய ஆரோக்கிய பிரச்சனையாக மாறி இருக்கிறது உடல் பருமன் அல்லது கூடுதல் எடை. உடல் எடை கூடுவது என்பது சில வாரங்கள் முதல் சில மாதங்களுக்குள் நடக்கும் விஷயமாக இருக்கும் அதே நேரம், ஏறிய உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. பலரும் தங்களது எடை குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக டயட் அல்லது ஒர்கவுட்ஸ் அல்லது இரண்டையும் சேர்க்கிறார்கள். எனினும் பலரால் தொடர்ந்து இந்த வழிமுறைகளை கடைபிடிக்க முடிவதில்லை.
இதனிடையே Palak Notes நிறுவனத்தின் நிறுவனரான ஊட்டச்சத்து நிபுணர் பாலக் மிதா, எடை குறைப்பு முயற்சியில் கடைபிடிக்கப்படும் உணவுமுறைகளில் டயட் கட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியான ஒர்கவுட்ஸ் இரண்டையுமே தான் வெறுப்பதாக கூறியிருக்கிறார். டயட் கட்டுப்பாட்டை நான் பின்பற்றிய போது ஊட்டச்சத்து குறைபாடுகளால் அவதிப்பட்டேன். தீவிர ஒர்கவுட்ஸ் செய்யும் போது எனக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டது. எனவே இவை இரண்டையும் செய்யாமல் வேறு வழியில் உடல் எடையை குறைக்க முடியுமா என்று சிந்தித்தேன். இறுதியில் கீழ்காணும் டிப்ஸ்கள் டயட் அல்லது ஒர்கவுட்ஸ் செய்யாமலேயே எனது எடை குறைப்பு பயணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்றார். இதோ அவர் பட்டியலிட்ட டிப்ஸ்கள் இதோ..
மெதுவாக மென்று சாப்பிடுங்கள் : சாப்பிடும் போது உணவுகளை பொறுமையாக, நிதானமாக மென்று சாப்பிடுவது வயிறு முழுமையடைந்த உணர்வை ஏற்படுத்த உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான உணவாக இருந்தாலும் டயட் என்ற பெயரில் அதை தவிர்க்காமல் சிறிய அளவு எடுத்து கொண்டு சுமார் 15 - 20 நிமிடங்கள் மென்று சாப்பிடுவது, உங்கள் மூளை வயிறு நிரம்பி விட்டது என்பதற்கான சிக்னலை பெற உதவும்.
உணவில் மட்டுமே கவனம் : சாப்பிடும் நேரத்தில் கூட மொபைல், டிவி என எதையாவது பார்த்து கொண்டே தான் நம்மில் பெரும்பாலானோர் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இதனால் சாப்பாட்டில் உரிய கவனம் செலுத்தாமல் தேவைக்கு அதிகமாக உணவை எடுத்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. சாப்பிடும் நேரத்தில் கவன சிதறலை தடுப்பது எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நிறைய புரோட்டீன் : எடை இழப்பை பொறுத்த வரை டயட்டில் புரோட்டீன் அதிகம் சேர்த்து கொள்வது அவசியம் என்கிறார் பாலக் மிதா. தனது டயட்டில் முட்டை, கோழிக்கறி, பன்றி இறைச்சி விலா எலும்புகள், கிரீக் யோகர்ட் ஆகியவை எனது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளப்பட்ட சில புரோட்டீன் உணவுகள் என்று கூறினார். புரோட்டீன் அடிப்படையிலான உணவுகள் பசியில்லாமல் நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும் என்கிறார்.
ஃபைபர் சத்துமிக்க உணவுகள்: புரோட்டீன் நிறைந்த உணவுகளோடு ஃபைபர் சத்து நிறைந்த உணவுகளையும் டயட்டில் சேர்ப்பது பசியை கட்டுப்படுத்த சிறந்த வழி. இது உங்கள் குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் என்றார்.
ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ்களை தவிர்க்கவும் : எடை குறைக்கும் முயற்சியில் இருந்தாலும் பிடித்த ஸ்னாக்ஸ்களை சாப்பிடலாம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நொறுக்கு தீனிகளை தின்பதை குறிக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் பதப்படுத்தப்பட்ட மற்றும் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்ட நொறுக்கு தீனிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஹம்முஸ் மற்றும் ஸ்டாக் கேரட், வெள்ளரி மற்றும் பீட்ரூட் போன்றவற்றை சாப்பிடலாம். ஆரோக்கியமான சாலட்களை தயாரித்து எடுத்து கொள்ளலாம். முளைகட்டிய பயிறு, வேகவைத்த சுண்டல் உள்ளிட்டவற்றை சேர்க்கலாம்.
சுகர் ட்ரிங்ஸ்களை தவிர்க்கவும் : நான் டயட் கோக்கை பெரிதும் விரும்ப மாட்டேன், ஏனென்றால் அது நல்லதல்ல என்று எனக்குத் தெரியும். எனவே வெளியில் கிடைக்கும் சுகர் ட்ரிங்ஸ்களை தவிர்த்து லெமன் வாட்டர் அல்லது இளநீர் போன்ற இயற்கை பானங்களை எடுத்து கொள்வது சிறந்தது என்கிறார் பாலக் மிதா.
சாப்பிடுவதற்கு முன் 2 கிளாஸ் தண்ணீர் : சாப்பிடுவதற்கு சரியாக 2 நிமிடங்கள் முன் 2 கிளாஸ் தண்ணீர் குடிப்பது எனக்கு சரியாக வேலை செய்தது. ஆனால் பல ஊட்டச்சத்து நிபுணர்கள் இதற்கு எதிராக கருத்து கூறலாம். சாப்பிட செல்லும் முன் நான் குடிக்கும் 2 கிளாஸ் தண்ணீர் தேவைக்கு அதிகமாக நான் சாப்பிடுவதை தடுத்து எடையை பராமரிக்க உதவுகிறது என்கிறார் இவர்.
நல்ல தூக்கம் : தினசரி 7 - 8 மணி நேரம் போதுமான ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கம் எடை பராமரிப்பில் மிகவும் முக்கியம். எனவே தூங்க செல்வதற்கு குறைந்தபட்சம் 1 மணி நேரம் முன் மொபைல், டிவி உள்ளிட்டவற்றை தவிர்த்து புத்தகங்களை படிக்கலாம். இனிமையான இசையை கேட்கலாம்.