முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல்»இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிப்பது நல்லதா..?
PREVNEXT
News18 Tamil | January 30, 2023, 22:04 IST

இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிப்பது நல்லதா..?

தாகமே இல்லாமல் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிப்பது நல்லது என நீங்களாக நினைத்துக்கொண்டிருந்தால் அது தவறு.

   இரவானாலும் , பகலானாலும் தாகம் எடுத்தால் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் தாகமே இல்லாமல் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிப்பது நல்லது என நீங்களாக நினைத்துக்கொண்டு தண்ணீரை குடித்துவிட்டு தூங்குவது, சிந்திக்க வேண்டிய விஷயமே.
  1/ 5

  இரவானாலும் , பகலானாலும் தாகம் எடுத்தால் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் தாகமே இல்லாமல் இரவு தூங்கும் முன் தண்ணீர் குடிப்பது நல்லது என நீங்களாக நினைத்துக்கொண்டு தண்ணீரை குடித்துவிட்டு தூங்குவது, சிந்திக்க வேண்டிய விஷயமே.

  2/ 5

  இரவு தூங்கும் முன் தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது தூக்க நேரத்தை முற்றிலும் பாதிக்கும். ஏனெனில் இரவெல்லாம் எழுந்து பாத்ரூமிற்கும் படுக்கையறைக்கும் நடப்பதே வேலையாகிவிடும்.

  3/ 5

  என்ன பாதிப்பு..? உண்மையில் இரவு என்பது நம்முடைய உடல் தானாகவே ஓய்வு எடுக்கும் நேரம். அப்போது உடல் நம்மை தொந்தரவு செய்யாது. அதில் சிறுநீர்ப் பையும் அடக்கம். அதனால்தான் சிறுநீர் பையில் எஞ்சியிருக்கும் நீரைக் கூட வெளியேற்றுவிட்டுத் தூங்க வேண்டும் என்ற காரணத்திற்காக தூங்கும் முன் சிறுநீர் கழிப்பார்கள். அதற்கு ஏற்ப நிம்மதியான தூக்கத்திற்கு நம்மை 7 முதல் 8 மணி நேரம் வரை சிறுநீர் பையும் தொந்தரவு செய்யாது.

  4/ 5

  ஆனால், மாறாக நாம் அதிகமாக தண்ணீர் குடித்துவிட்டு துங்க இரவெல்லாம் நடந்துகொண்டே இருக்க நேரிடும். இப்படி இரவுத் தூக்கம் பாதிக்கப்பட்டால் உடலில் எந்த பழுது நீக்க வேலைகளும் நடக்காது. உடல் களைப்பு, பகலில் தூங்கி வழிதல், கண் எரிச்சல், கவனக்குறைவு , பசியின்மை போன்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஒரு ஆய்விலும் 45 வயதுக்கு மேற்பட்டோர் இரவு 6 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவதால் பக்கவாதப் பிரச்னையால் பாதிக்கப்படுவதாக கூறுகிறது.

  5/ 5

  தீர்வு..? சாப்பிட்டவுடன் வெதுவெதுப்பாக தண்ணீர் அருந்துவது செரிமானத்திற்கு உதவும். நச்சு நீக்கம் செய்யும். மறுநாள் காலை மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்காது. எனவே தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பதை தவிருங்கள். அப்படியே குடிக்க வேண்டுமென்றால் வெதுவெதுப்பான தண்ணீர் அதுவும் தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் குடிப்பது மிகவும் நல்லது. சாதாரண தண்ணீரும் குடிக்கலாம், ஆனால் அதுவும் 30 நிமிடங்களுக்கு முன் குடிக்க வேண்டும்.

  Published by: Aarthy Victor
  First published: January 30, 2023, 22:04 IST

  அண்மைச்செய்தி

  முக்கிய செய்திகள்