ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல்
PREVNEXT
News18 Tamil | November 30, 2022, 17:42 IST

உடல் எடையை குறைக்க நல்ல ஜிம் தேடிட்டு இருக்கீங்களா..? சரியான ஜிம்-ஐ தேர்வு செய்ய 5 கோல்டன் ரூல்ஸ்...

நீங்கள் ஆஃபர் கிடைக்கிறதே என செல்லாமல் சில விஷயங்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்து செல்வதே நீங்கள் செலவழிக்கும் பணத்திற்கு பிரயோஜனம். நீங்கள் நினைத்த காரியமும் நடக்கும்.

   நாம் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஜிம் உடற்பயிற்சி வீடியோக்களையும், டயட் உணவுகள், புரோட்டீன் ஷேக்குகளையும் தவிர்க்க முடிவதில்லை. அவ்வாறு வருவதும் ஆச்சரியமில்லை. ஏனெனில் பலரும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பதும் அல்லது ஃபிட்டாக இருக்க நினைப்பதும் அதிகரித்துவிட்டது. கொரோனாவுக்குப் பின் பலருக்கும் தங்கள் உடல் நலன் மீது அதிக அக்கறை வந்துவிட்டது என்றே சொல்லலாம். அதன் ஒரு பகுதியாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி உடற்பயிற்சி அவசியம் என்பதால் குறைந்தபட்சம் வீட்டிலாவது உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்கின்றனர்.
  1/ 9

  நாம் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஜிம் உடற்பயிற்சி வீடியோக்களையும், டயட் உணவுகள், புரோட்டீன் ஷேக்குகளையும் தவிர்க்க முடிவதில்லை. அவ்வாறு வருவதும் ஆச்சரியமில்லை. ஏனெனில் பலரும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பதும் அல்லது ஃபிட்டாக இருக்க நினைப்பதும் அதிகரித்துவிட்டது. கொரோனாவுக்குப் பின் பலருக்கும் தங்கள் உடல் நலன் மீது அதிக அக்கறை வந்துவிட்டது என்றே சொல்லலாம். அதன் ஒரு பகுதியாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி உடற்பயிற்சி அவசியம் என்பதால் குறைந்தபட்சம் வீட்டிலாவது உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்கின்றனர்.

  2/ 9

  சிலர் ஜிம்முக்கு சென்று உரிய உடற்பயிற்சியாளர்களின் உதவியுடன் உடல் எடையை சரியான அளவில் வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். அந்த வகையில் நீங்களும் ஜிம் செல்ல விரும்புகிறீர்கள் எனில் உங்களுக்கான கட்டுரைதான் இது. நீங்கள் ஆஃபர் கிடைக்கிறதே என செல்லாமல் சில விஷயங்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்து செல்வதே நீங்கள் செலவழிக்கும் பணத்திற்கு பிரயோஜனம். நீங்கள் நினைத்த காரியமும் நடக்கும். அசௌகரியமின்றி பயிற்சி செய்யவும் இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும். சரி அந்த 5 கோல்டன் ரூல்ஸ் என்னென்ன பார்க்கலாம்.

  3/ 9

  உங்கள் இலக்கை நிர்ணயிக்கவும் : நீங்கள் ஜிம்மில் உறுப்பினராக சேர நினைக்கிறீர்கள் எனில் அதற்கான தேவையை தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய இலக்கு என்ன..? எதை அடைய இந்த சேர்க்கை என்பதை தெளிவாக உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் உடலை கட்டுமஸ்தாக மேம்படுத்த வேண்டுமெனில் வெயிட் லிஃப்டிங், டம்புள்ஸ் என முக்கியத்துவம் கொடுக்கும் ஜிம்மை தேர்வு செய்யுங்கள். சுறுசுறுப்பாக இருக்கவும், ஃபிட்னஸிற்காக தேர்வு செய்கிறீர்கள் எனில் கிராஸ்ஃபிட் ஜிம் சரியான தேர்வு. உடல் இலகுத்தன்மைக்காக எனில் பைலேட் செக்‌ஷன் கொண்ட ஜிம் தேர்வு செய்யவும்.

  4/ 9

  சரியான தேர்வு : உங்கள் ஜிம் தேர்வு உங்கள் இலக்கை பூர்த்தி அடையச் செய்யும் இடமாக இருக்க வேண்டும். அதன் மூலம் நீங்கள் நினைத்த பலனை அடைய வேண்டும்.

  5/ 9

  உடற்பயிற்சியாளர்கள் குறித்து விசாரிக்கவும் : சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களை வைத்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். எத்தனை பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் அவர்கள்தான் நீங்கள் நினைத்த இலக்கிற்கு உதவப்போகும் நபர். அதோடு அவர்களின் பயிற்சி சரியாக இருந்தால்தான் நீங்கள் தினமும் செல்ல உற்சாகம் கிடைக்கும். சாற்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் எனில் ஏதேனும் பயிற்சியின்போது உண்டாகும் காயங்களுக்கும் அவர் முதலுதவி செய்வார். உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்குவார்.

  6/ 9

  தூரத்தை தெரிந்துகொள்ளுங்கள் : நீங்கள் ஜிம் தேர்வு செய்யும்போது அது உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். தூரமாக இருந்தால் அதுவே சிரமமாக மாறிவிடும். இதனால் நீங்கள் அடிக்கடி ஜிம் செல்வதை தவிர்த்துவிடுவீர்கள். முடிந்தவரை நடக்கும் தூரத்தில் இருந்தால் இன்னும் சிறப்பு. நீங்கள் ஜிமுக்கு நடந்தே செல்வது warm-up போல் இருக்கும்.

  7/ 9

  உங்கள் பயிற்சி நேரத்தை தெரிந்துகொள்ளுங்கள் : அதாவது சில இடங்களில் ஜிம்மில் அதிகமாக சேர்வதால் கூட்டமாக இருக்கும். இது பயிற்சி செய்வதற்கான சரியான சூழலாக இருக்காது. அதேசமயம் உங்களுக்கு பயிற்சி செய்ய கருவிகள் கிடைக்காது. மற்றொருவர் முடிக்கும் வரை காத்திருப்பது உங்கள் நேரத்தை வீணடிப்பதாக இருக்கும். எனவே எந்த நேரத்தில் உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் என தெரிந்துகொள்ளுங்கள். ஒத்துவரவில்லை எனில் அந்த ஜிம்மை தவிர்ப்பது நல்லது.

  8/ 9

  சனா பாத் மற்றும் மாற்றும் அறைகளை தெரிந்துகொள்வது அவசியம் : அதாவது சிலருக்கு பளு தூக்குதல் செய்ய விருப்பம் இல்லை எனில் ஆவிக்குளியல் என்னில் சனா பாத் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் கலோரிகளை எரிக்க முடியும். அந்த வகையில் அந்த அறையின் வெப்பநிலை 158 முதல் 212 டிகிரி ஃபாரன்ஹீட்டில் இருக்க வேண்டும். இதனால் உடலின் நச்சுத்தன்மையும் நீங்கும். உடல் ஃபிரெஷாக இருக்கும். அதேபோல் ஜிம்மில் மாற்று அறைகள் இருக்கின்றனவா, அவை எப்படி உள்ளன, சௌகரியங்கள் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்வது அவசியம்.

  9/ 9

  குறிப்பு : இறுதியாக அந்த ஜிம்மின் உறுப்பினர் நுழைவுக்கட்டணம் உங்கள் பட்ஜெட்டிற்குள் இருக்க வேண்டும். அதேசமயம் நீங்கள் வராத நாட்களை மற்றொரு நாளில் நீட்டிக்கொள்ளும் வசதியும் இருக்க வேண்டும் என்பது அவசியம்.

  Published by: Sivaranjani E
  First published: November 30, 2022, 17:42 IST

  அண்மைச்செய்தி

  Top Stories