ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல்
PREVNEXT
News18 Tamil | November 30, 2022, 17:30 IST

ஃபிரிட்ஜில் வைக்கும் பனீர் இறுகி கெட்டியாகிறதா..? பஞ்சுபோல் மாற்ற 5 டிப்ஸ்..!

ஒருவேளை பன்னீர் அறை வெப்பநிலையை அடைந்த பிறகும் கூட நீங்கள் எதிர்பார்க்கும் அளவு மென்மையாக இல்லாவிட்டால் இந்த டிப்ஸை பயனப்டுத்தி பாருங்கள். மிதமாக சுட வைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு..

   பிரபலமான பல இந்திய உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது பன்னீர். இதை வீட்டில் தயாரித்தாலும் சரி, கடைகளில் வாங்கினாலும் சரி மென்மையாக மற்றும் மிருதுவாக இருந்தால் மட்டுமே சுவையாக இருக்கும்.
  1/ 8

  பிரபலமான பல இந்திய உணவுகளில் ஒரு முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது பன்னீர். இதை வீட்டில் தயாரித்தாலும் சரி, கடைகளில் வாங்கினாலும் சரி மென்மையாக மற்றும் மிருதுவாக இருந்தால் மட்டுமே சுவையாக இருக்கும்.

  2/ 8

  சீக்கிரமே வீணாகி போக கூடிய தன்மை கொண்டது என்பதால் பன்னீரை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சாஃப்ட்டாக இருந்தால் மட்டுமே சுவையாக இருக்கும் ஆனால் பெரும்பாலான நேரங்களில் ஃபிரிட்ஜில் வைப்பது பன்னீரை கடினமானதாக மற்றும் ஹார்டாக மாற்றி விடுகிறது. சுவையான டிஷ்களை மேலும் சுவை மிகுந்ததாக மாற்றும் பன்னீர் செங்கல் போல இருந்தால் டேஸ்ட் கெட்டு விடும்.

  3/ 8

  நீங்கள் பன்னீர் பயன்படுத்தி செய்யப்படும் டிஷ்களின் பிரியர் என்றால் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டு கடினமான பன்னீரை எப்படி மென்மையாக்குவது என்பதற்கான ஹேக்ஸ்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட பன்னீரை சாஃப்ட்டாக்க உதவும் 5 எளிய டிப்ஸ்கள் கீழே:

  4/ 8

  ஃபிரிட்ஜில் வைத்தாலும்... முடிந்த அளவு ஒவ்வொரு முறையும் ஃபிரெஷ்ஷாக பன்னீர் வாங்கி பயன்படுத்தலாம். வேறு வழியின்றி மீதமுள்ள பன்னீரை ஃபிரிட்ஜில் வைப்பது தவிர்க்க முடியாத போது ஒரு மிக முக்கியமான டிப்ஸ் என்னவென்றால், எப்போது அதை ஃபிரிட்ஜில் வைத்தாலும் சரியாக கவர் செய்து வைக்க வேண்டும். எப்போதும் காற்று புகாத ஏர்-டைட் கன்டெயினரில் ஸ்டோர் செய்து வைக்கவும். இப்படி செய்வது ஃபிரிட்ஜினுள் வெளிப்படும் கடுமையான குளிர் வெப்பநிலை பன்னீரில் இருக்கும் ஈரப்பதத்தை போக்காது.

  5/ 8

  அறை வெப்பநிலைக்கு மாற்றுங்கள்: அதே போல பன்னீரை வைத்து டிஷ் செய்ய போவதை தீர்மானித்து விட்டால், டிஷ்ஷில் பயன்படுத்தும் முன்பே அதை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைத்து விடுங்கள். இதனால் பன்னீர் ரூம் டெம்பரேச்சருக்கு வந்து விடும். சுமார் 2-3 மணி நேரங்களுக்கு முன்பே வெளியே எடுத்து வைத்து விட்டால், ரூம் டெம்பரேச்சருக்கு வர போதுமான நேரத்தைக் கொடுக்கும். இதன் மூலம் டிஷ்ஷில் பன்னீரை சேர்ப்பதற்கு முன்பு அது தானாகவே சாஃப்டாகி விடும்.

  6/ 8

  வெதுவெதுப்பான தண்ணீரில்... ஒருவேளை பன்னீர் அறை வெப்பநிலையை அடைந்த பிறகும் கூட நீங்கள் எதிர்பார்க்கும் அளவு மென்மையாக இல்லாவிட்டால் இந்த டிப்ஸை பயனப்டுத்தி பாருங்கள். மிதமாக சுட வைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, பன்னீர் ஸ்லாப்பை க்யூப்ஸாக வெட்டி அதில் ஊற வைக்கவும். பன்னீர் முழுவதும் மூழ்கும் அளவிற்கு போதுமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். சரியாக 5 நிமிடங்கள் கழித்து தண்ணீரிலிருந்து எடுத்து விடுங்கள். அதிக நேரம் ஊறினால் இன்னும் மென்மையாகும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வெதுவெதுப்பான நீரில் பன்னீரை அதிக நேரம் ஊறவைப்பது டிஷ் செய்ய பயன்படுத்தும் போது எளிதில் உடைந்து விடும்.

  7/ 8

  நீராவியில்... ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட பன்னீரை மென்மையாக்குவதற்கான மற்றொரு வழி, அதை நீராவியில் வேக வைப்பது. ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க வைக்கவும். அடுப்பை அணைத்த பின் அதன் மேல் ஒரு ஸ்ட்ரெய்னரை (வடிகட்டி) வைத்து, அதன் மீது பன்னீர் க்யூப்ஸ்களை சமமாகப் பரப்பவும். இதனால் கீழே உள்ள கொதிக்கும் நீரில் இருந்து நீராவி பன்னீர் க்யூப்ஸை அடையும். நன்கு வேக பன்னீர் க்யூப்ஸின் மேல் ஒரு மூடி போட்டு மூடவும். இதனால் நீராவி வெளியேறாது. அதிகபட்சம் 10 நிமிடங்கள் வரை இப்படி செய்த பிறகு பன்னீரை எடுத்து பார்த்தால் மிகவும் மென்மையாக மாறி இருக்கும்.

  8/ 8

  இறுதியில் சேர்த்தால் போதும்... நீங்கள் மேற்காணும் டிப்ஸ்களை பயன்படுத்தி பன்னீரை மென்மையாக்கி இருந்தாலும் சமைக்கும் போது பன்னீரை மென்மையாக வைத்திருக்க விரும்பினால், டிஷ் செயல்முறையின் கடைசியில் சேர்ப்பது சிறப்பாக இருக்கும். ரெசிபி ப்ராசஸில் முன்கூட்டியே சேர்ப்பதன் காரணமாக பன்னீர் அதிகமாக வேக கூடும், இதனால் அது கடினமாகி விடும். எனவே நீங்கள் மற்ற அனைத்து பொருட்களையும் சமைக்கும் வரை காத்திருந்து, இறுதியாக டிஷ்ஷின் செய்முறையில் பன்னீரை சேர்க்கவும்.

  Published by: Josephine Aarthy
  First published: November 30, 2022, 17:30 IST

  அண்மைச்செய்தி

  Top Stories