சிக்கன் குழம்பு எலும்புடன் கூடிய சிக்கனை கொண்டு செய்யுங்கள், அப்போது குழம்பு சுவையாக இருக்கும்.
சிக்கன் குழம்பு செய்யும் பொழுது 1-2 உருளைக்கிழங்குகளை தோலுரித்து, நீளவாக்கில் வெட்டி, சேர்த்துக் கொள்ளலாம். இது குழம்பின் சுவையை கூட்டும்
மேலும் சிக்கன் குழம்பை இறக்குவதற்கு 1-2 நிமிடங்களுக்கு முன்பு, 4 தேக்கரண்டி தேங்காய் 4 முந்திரிபருப்பு, 1/2 தேக்கரண்டி கசகசா, ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு செய்தால் குழம்பு கெட்டியாகும் சுவையாகவும் இருக்கும்.
பச்சை மிளகாய், கொத்தமல்லி, ஆகியவற்றுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் சிக்கன் குழம்பு மிகவும் மணமாக மற்றும் சுவை கூடுதலாக இருக்கும்.
தேங்காய் பதிலாக தேங்காய்ப் பாலும் ஊற்றி கோழி குழம்பு செய்யலாம். மிகவும் ருசியாக இருக்கும், ஆனால் அதில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது. கவனமாக இருக்கவும்