ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல்
PREVNEXT
News18 Tamil | December 01, 2022, 17:13 IST

உடல் பருமனுக்கு புரோட்டீன் பற்றாக்குறைதான் காரணமா..? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

அதிகமாக பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளில் இருந்து தான் அதிக ஆற்றல் பெறப்படுகிறது. எனவே, புரதம் குறைபாடு மற்றும் புரதசத்துக்கான தேவை, உடலில் உள்ள ஊட்டச்சத்து சமநிலையை பாதித்து, அதிகமாக பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வைக்கும். இது உடல் பருமனை ஏற்படுத்துகிறது. உடலுக்கு தேவையான புரத கிடைக்காததால் தான் உலகம் முழுவதும் காணப்படும் உடல்பருமன் அதிகரித்து வருகிறது.

   உணவுப் பழக்கத்தில் பெரும்பாலானவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு புரதம் நிறைந்த உணவை சாப்பிடாமல் இருப்பதுதான்! சுவை என்று ஒரே காரணத்துக்காக, சுத்திகரிக்கப்பட்ட, ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுகளை பலரும் அதிகமாக சாப்பிடுகின்றனர். எனவே புரத உணவுகளில் இருக்கும் நன்மைகள் கிடைப்பதில்லை. புரதம் சாப்பிடவில்லை என்றால் உடலில் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும், உடல் பருமன், அதிகமாக சாப்பிடுவது ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.
  1/ 8

  2/ 8

  இந்தியா மட்டுமல்லாமல் மேற்கத்திய நாடுகளில் கூட உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் இதைப் பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வு அதிர்ச்சியூட்டும் பல தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

  3/ 8

  இந்த ஆய்வை தலைமை தாங்கி நடத்திய, வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஊட்டச்சத்து ஈக்கலாஜி கல்விக்கூடம் தலைவரான பேராசிரியர் டேவிட் ரவுபன்ஹைமர் "மனிதர்களும் பிற உயிரினங்களைப் போலத்தான். ஆற்றல் மற்றும் சத்து வழங்கும் கொழுப்பு மற்றும் கார்ப் உணவுகளைப் போல, புரத உணவுகளுக்கு அதிகம் தேவை இருக்கிறது” என்று கூறினார்.

  4/ 8

  சிட்னி பல்கலைகழகத்தின் சார்லஸ் பெர்கின்ஸ் சென்டர் நடத்திய இந்த ஆய்வில் ஓபிசிட்டி என்ற ஜர்னலில் மேலே குறிப்பிட்டவைப் பற்றிய பல்வேறு விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா புள்ளியியல் பணியகம், தேசிய அளவில் ஊட்டச்சத்து, உடல் ரீதியான செயல்பாடுகள் மற்றும் புரதசத்து லீவரேஜ் ஹைப்போதீசிஸ் ஆகியவற்றின் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த ஆய்வின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

  5/ 8

  தேசிய ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடு கணக்கெடுப்பு என்ற இந்த கிராஸ்-செக்ஷனல் ஆய்வில் மொத்தம் 9341 நபர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு 2011 மே முதல் 2012 ஜூன் வரை நடைபெற்றது. ஆய்வில் கலந்து கண்டவர்களின் சராசரி வயது 46.3 ஆகும். இந்த ஆய்வு, அந்த ஆண்டு ஓபிசிட்டி ஜர்னலில் வெளியான முதல் 5 ஆய்வுகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

  6/ 8

  எந்த வகையான உணவில் இருந்து ஆற்றல் வருகிறது என்று சராசரி கணக்கீட்டின் படி, புரத உணவுகளில் இருந்து கிடைக்கும் ஆற்றல் 18.4% என்றும், கார்ப் உணவுகளில் இருந்து கிடைக்கும் ஆற்றல் 43.5% என்றும், கொழுப்பு உணவுகளில் இருந்து கிடைக்கும் ஆற்றல் 30.9% என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

  7/ 8

  அதிகமாக பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளில் இருந்து தான் அதிக ஆற்றல் பெறப்படுகிறது. எனவே, புரதம் குறைபாடு மற்றும் புரதசத்துக்கான தேவை, உடலில் உள்ள ஊட்டச்சத்து சமநிலையை பாதித்து, அதிகமாக பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வைக்கும். இது உடல் பருமனை ஏற்படுத்துகிறது. உடலுக்கு தேவையான புரத கிடைக்காததால் தான் உலகம் முழுவதும் காணப்படும் உடல்பருமன் அதிகரித்து வருகிறது.

  8/ 8

  நீரிழிவு, இதய நோய்கள், உள்ளிட்ட பல நோய்கள் நம் உணவுப்பழக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. நம் உடல் தேடும் இந்த புரத ஆற்றல் பற்றிய கூடுதல் தகவல், பல நோய்களை கட்டுக்குள் வைக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.

  Published by: Josephine Aarthy
  First published: December 01, 2022, 17:13 IST

  அண்மைச்செய்தி

  Top Stories